ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், மஞ்சு வாரியர், சேத்தன், தமிழ், கென், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’விடுதலை – பாகம் 2’
இந்நிலையில் விஜய் சேதுபதி தான் எப்படி மக்கள் படை தலைவனாக மாறினார் என்பதை சொல்லிக் கொண்டே வர இதே நேரத்தில் விஜய் சேதுபதியின் கூட்டாளிகள் அவரை விடுவிக்க திட்டம் போடுகிறார்கள். இறுதியில் விஜய் சேதுபதி போலீஸ் பிடியில் இருந்து தப்பித்தாரா ? இல்லையா? சூரி விஜய் சேதுபதியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’விடுதலை – பாகம் 2’ படத்தின் மீதிக்கதை.
வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி முழுப் படத்தையும் தன் தோள் மீது சுமந்து செல்கிறார். அன்பு, காதல், பாசம், வீரம் என அனைத்திலும் இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் மஞ்சு வாரியர், தவறு செய்யும் தன் குடும்பத்தை, எதிர்த்து போராடும் பெண்ணாக நடித்து கவனிக்க வைக்கிறார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. கென் கருணாஸ் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது.
கம்யூனிச தலைவராக நடித்திருக்கும் கிஷோர்,யக்குநர் அனுராக் காஷ்யப், தலைமை செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், சேத்தன், போஸ் வெங்கட், வின்செண்ட் அசோகன் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கிறது பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு காடு மற்றும் மலைகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிபடுத்தியிருக்கிறார்.
ஆயுதம் ஏந்தி போராடும் போராளிகளையும் அதை ஒடுக்க முயற்சிக்கும் போலீசையும் மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்
மொத்தத்தில் ’விடுதலை – பாகம் 2’ – வெற்றி பயணம்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள்: சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், மஞ்சு வாரியர், சேத்தன், தமிழ், கென், போஸ் வெங்கட், இளவரசு மற்றும் பலர்.
இசை: இளையராஜா
இயக்கம்: வெற்றி மாறன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா , அப்துல்நாசர் & யுவராஜ்
Leave a Reply