விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார், ஆதேஷ் பாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சீசா’
கோவை மாவட்டத்தில் தொழிலதிபரான நிஷாந்த் ரூசோ – பாடினி குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அங்கு நாயகனுக்கு சொந்தமான பங்களாவில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஒருநாள் அந்த வீட்டில் வேலை பார்க்கும் ஆண் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த வீட்டில் இருந்த நிஷாந்த் ரூசோ அவரது மனைவி பாடினி குமார் இருவரும் காணாமல் போகிறார்கள்.
இந்த வழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனையடுத்து காணாமல் போன தம்பதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் நட்டி நட்ராஜிக்கு விசாரணையில் நிஷாந்த் ரூசோ பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வருகிறது.
ஒரு கட்டத்தில் காணாமல் போன நிஷாந்த் ரூசோ மட்டும் மீண்டும் தனது வீட்டுக்கு வருகிறார். அவருடன் இருந்த அவரது மனைவி என்ன ஆனார்? என்பது குறித்து போலீஸ் அவரிடம் விசாரிக்கும் போது, அவர் சரியான மனநிலையில் இல்லை என்பது தெரிய வருகிறது. இறுதியில் காணாமல் போன பாடினி உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா? வேலைக்காரனை கொலை செய்தது யார்? என்பதே ’சீசா’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் நேர்மையான காவல்துறை அதிகாரியாக வந்து நீதியை நிலை நிறுத்துகிறார்.
இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக கவனமாக கையாண்டுயிருக்கிறார்.நிஷாந்த் ரூசோவின் மனைவியாக நடித்திருக்கும் பாடினி குமார், கதையில் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நிஷாந்தின் நண்பராக நடித்திருக்கும் மூர்த்தி, வீட்டில் வேலை செய்பவராக நடித்திருக்கும் மாஸ்டர் ராஜநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் அரவிந்தராஜ், கார்த்தியாக நடித்திருக்கும் நடிகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சரண்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அருமை ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஆகியோரது கேமரா கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.
தயாரிப்பாளர் டாக்டர்.கே.செந்தில் குமார், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட, சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய ஆபத்தானவர்கள் என்பதை தன் கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வையில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் குணா சுப்பிரமணியம், பல திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை மற்றும் அடுத்தது என்ன நடக்குமோ ? என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் ’சீசா’ சஸ்பென்ஸ் திரில்லர்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார், ஆதேஷ் பாலா
இசை : சரண்குமார்
இயக்கம் : குணா சுப்பிரமணியம்,
மக்கள் தொடர்பு : ஜே. கார்த்திக் (PRO)
Leave a Reply