ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  “தருணம்”  திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக  ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.

நடிகை ஸ்ம்ருதி வெங்கட் பேசியதாவது…
எங்கள் தருணம் படத்திற்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. அரவிந்தின் தேஜாவு படத்தில் நான் நடித்திருந்தேன், அதில் எனக்குச் சின்ன கேரக்டர், ஆனால் அவர் என்னை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தார். அப்போது அடுத்த படத்தில் நீங்க தான் ஹீரோயின் என்றார் நான் நம்பவில்லை, ஆனால் இந்தப்படத்தில் நான் தான் ஹீரோயின் என்றார் ஆச்சரியமாக இருந்தது. இந்தக்கதை சொன்னார் மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மிகவும் வித்தியாசமான மாடர்ன் கேரக்டர், இதுவரை செய்ததிலிருந்து மாறுபட்ட கேரக்டராக இருக்கும். எனக்கு முக்கியமான நேரத்தில் கிடைத்த வாய்ப்பு அரவிந்த் சாருக்கு நன்றி. கீதா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளருக்கு நன்றி.  ராஜா பட்டாசார்ஜி மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார், அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பைத் தந்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.


தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது….
இந்த தைப் பொங்கல் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும். தருணம் படத்திற்கும் நல்லதாக அமைய வேண்டும். புதிய தயாரிப்பாளர் புகழுக்கு வாழ்த்துகள். முதல் படத்திலேயே, ஒரு கார்பரேட் கம்பெனி போல் சினிமாவைத் திட்டமிட்டு உருவாக்கியது ஆச்சரியமாக இருந்தது. தயாரிப்பாளர் இன்வால்வ்மெண்ட் கம்மியாக இருக்கும் என்று தான் கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் இந்தப்படத்தில் புகழ் மற்றும் ஈடன் இருவரின் இன்வால்வ்மெண்ட் மிகப்பெரியது. அரவிந்த்  எனக்கு நெருங்கிய நண்பர். படம் எனக்குக் காட்டினார், படம் பார்த்து கிஷனை எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. ஸ்ம்ருதி மிக அழகாக நடித்துள்ளார். கீதா மேடம் மிக நன்றாக நடித்துள்ளார். ராஜ் ஐயப்பா நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஒரு குவாலடியான படத்தை இந்தப்படக்குழு தந்துள்ளனர். இந்த பொங்கலுக்கு ஏழு படங்கள் திரைக்கு வருகிறது. எப்போதும் பொங்கல்  பண்டிகையில், நல்ல படம் என்றால் மக்கள் திரையரங்கு வந்து பார்ப்பார்கள். அதனால் திரைக்குக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அதேபோல் பொங்கலுக்கு  இந்த திரைப்படத்தைக் கொண்டு வந்துள்ளார்கள்.  அரவிந்த்துக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரட்டும். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.


திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன்,  பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.

இப்படம் வரும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – அருள் E சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் A, ஈடன் (ZHEN STUDIOS )
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா (AIM)

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” பொங்கல் கொண்டாட்டமாக  வெளியாகிறது !!

Leave a Reply

Your email address will not be published.