12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் தடைகள் பல கடந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 குதிரையாக ஓடிகொண்டு இருக்கிறது.. அந்தவகையில் பொதுமக்களுக்கு உண்மையான பொங்கல் கொண்டாட்டமாக ‘மதகஜராஜா’ படம் அமைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
13 வருடங்களுக்கு முன் இந்தப்படம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்போது வரை இந்தப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும் பத்திரிகை, மீடியா, சோஷியல் மீடியா உள்ளிட்ட ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை ‘மதகஜராஜா’ படக்குழுவினர் இன்று சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடத்தினர்.







Leave a Reply