சென்னையில் அரசியல்வாதியான யோகிப்பாவுவிற்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான். .இந்நிலையில்,வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணான அஷ்மிதாவுடன்  நெருங்கி பழக அவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இதனையடுத்து வடமாநில பெண்ணான அஷ்மிதா  வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார்.

இதனையடுத்து அஷ்மிதாவின்  மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார். மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்க இவர்களுக்குள் கடும் போட்டி ஏற்படுகிறது.

இதனையடுத்து மேயர் பதவிக்கான  தேர்தல் நடைபெற இருக்கிறது. கட்சித் தலைவரான செந்தில் யோகி பாபு – சுப்பு பஞ்சு இருவருடன் பேச்சு வார்த்தை நடத்த இருவரும் தேர்தல் போட்டி போடுவதாக கூறுகிறார்கள். இதனையடுத்து  செந்தில் இருவரையும் சுயேட்சையாக போட்டியிட சொல்லுகிறார். யோகிபாபு தனது  முதல் மனைவியையும் சுப்பு தனது மனைவியையும் பாடியிருக்கிறார்கள்.

இறுதியில் யோகிபாபு – சுப்பு இருவரின் மனைவிகளில் மேயர் பதிவியை கைப்பற்றியது யார்? யோகிபாபுவின் இரண்டு மனைவிகளின் மகன்களில் உயர் பதவியை கைப்பற்றியது யார்? என்பதே  ’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் மீதிக்கதை.

ஆதிமூலம் எனும்  அரசியல்வாதியாக நடித்திருக்கும் யோகிபாபு தனது வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். சில இடங்களில் ரசிக்க வைக்கிறார்.கதையின்  நாயகன் என்றாலும்  படத்தில் குறைவான காட்சிகளில் வருகிறார்.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான்  இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்   வயதுக்கு மீறிய வசனங்கள்தான் குறையாக உள்ளது. சிறுமி ஹரிகா கதாபாத்திரம் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நினைவு கூர்வது போல் உள்ளது.

அரசியல் கட்சித் தலைவராக நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம் காட்டியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில் இவர் வரும் காட்சிகள் காமெடி வரவில்லை என்றாலும் இவரது நடிப்பு கவனம் பெறுகிறது.

சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது.

கார்த்தி நடிப்பில் வெளியான ‘சகுனி’ எனும் அரசியல் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் என். சங்கத் தயாள் இயக்கத்தில் உருவாகி, அவரது மறைவிற்குப் பிறகு வெளியாகி  உள்ளது. தமிழக அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.

மொத்தத்தில் ’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’  அரசியல் போட்டி

மதிப்பீடு : 2.75/5

நடிகர்கள் : யோகி பாபு, செந்தில், சுப்பு பஞ்சு, இளைய வர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா, வைகா ரோஸ், மயில்சாமி, சித்ரா லட்சுமணன், அஸ்மிதா சிங்
இசை : சாதகப் பறவைகள் சங்கர்
இயக்கம் : என்.சங்கர் தயாள்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (Aim)

Leave a Reply

Your email address will not be published.