பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகத்தியா’ திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் ‘அகத்தியா’ திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், இயக்குநர் பா.விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகை ராஷி கண்ணா பேசுகையில், ”நான் ஏற்கனவே ‘அரண்மனை 3’ , ‘அரண்மனை 4’ போன்ற  ஹாரர் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் ஹாரருடன் புதிய எலிமெண்ட்டும் இருக்கிறது. அதற்காக இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பா விஜயை பாடலாசிரியராக தெரிந்திருக்கும். ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு அவர் இயக்குநராகவும் வெற்றி பெறுவார். படத்தில் புது எலிமெண்ட்  கிளைமாக்ஸில் இடம் பிடித்திருக்கிறது. புது தொழில்நுட்பத்துடன் இணைந்து அது உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்தின் தரத்திற்காக தயாரிப்பாளர் கணேஷ் சார் அர்ப்பணிப்புடன் கூடிய  முழுமையான ஒத்துழைப்பை  வழங்கினார். இப்படம் அவருக்கும் வெற்றி படமாக அமையும். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜீவா உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். அவருடன் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

என் மீது அன்பு செலுத்தி வரும் தமிழ் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.

இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயமாக கவரும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.