Adida Melam Movie Stills

ABHAY KRISHNAA,ABINAYA ,JAYA PRAKASH,OORVASI,MAYIL SAMI Adida Melam Movie Stills.Music By ABISHEK and Director & Cinematography – ANBU. PRO – C.N.Kumar

டாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் ‘அடிடா மேளம்.’இப்படத்திற்கு முதலில் ‘மேளதாளம்’ என பெயர் வைக்கப்பட்டிருந்தது.படத்தின் கதையை கேட்ட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இப்படத்திற்கு ‘அடிடா மேளம்’ என்பதுதான் சரியான தலைப்பு என்றாராம். இதை பார்ப்பவர்களிடம் பெருமையாக கூறி வருகிறார் அபய் கிருஷ்ணா. இப்படத்தில் ‘நாடோடிகள்’ அபிநயா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஊர்வசி, மயில்சாமி, மிப்பு, ‘அவன் இவன்’ ராமராஜன், கானா பாலா உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார் அன்பு. இப்படம் பற்றி அபய் கிருஷ்ணா கூறியதாவது… ”திருமண தரகராக வரும் கதாநாயகனிடம் நாயகி அபிநயா தனக்கு நடக்கவுள்ள திருமணத்தை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்திவிடுமாறு சொல்லி அதற்கு பணமும் கொடுக்கிறார். அபிநயாவை மணக்கத்துடிக்கும் மாப்பிள்ளை மிப்புவோ, திருமணத்தரகர் அபய் கிருஷ்ணாவிடம் எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி முடிக்குமாறு அபிநயா கொடுத்த தொகையை விட அதிகமாக கொடுக்கிறார்.அவர்கள் இருவருக்குமான ஜாதகப்பொருத்தம் சூப்பர் என்று சொல்லி திருமணத்தை நடத்த சொல்கிறார் அபய் கிருஷ்ணா. அதன் பிறகு ஒரு உண்மை தெரிய வர அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த என்னென்ன முயற்சிகள் செய்கிறார் ஹீரோ, கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்” என்றார்.
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.

Movie Name : ADEDA MHELAM
Artist
ABHAY KRISHNAA (HERO & Producer)
ABINAYA (HEROINE)
JAYA PRAKASH
OORVASI
MAYIL SAMI
MIPU
AVAN IVAN RAMARAJAN
GANA BALA
Technicians
Director & Cinematography – ANBU
Editor – SASI KUMAR
Music – ABISHEK
Stunt – SUPER SUBARAYAN
Art – ARUSWAMY
Banner – DADO CREATIONS
Producer – ABHAY KRISHNAA
P.R.O – C.N.KUMAR

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.