கனடா நாட்டில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ் பெண்ணின் போராட்டங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் ஆகுவாய் காப்பாய். Lunar Motion Pictures and R Productions இணைந்து தயாரித்துள்ள இப்படம் பலமுறை மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்டு பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட அரங்காடல் என்கிற வெற்றி பெற்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இக்கதையை சகாப்தன் என்கிற நாடக ஆசிரியர் எழுதிய. இந்த மேடை நாடகத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து முழுநீள படமாக தயாரித்து உள்ளனர். சகாப்தன் எழுதிய கதையை திரை கதை அமைத்து இயக்கி இருப்பவர் மதிவாசன் இவர் கனடா படங்களில் நடித்து வரும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது கதையின் கரு கனடாவில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் உள்ள தனது கணவனை ஆறுவருட காலம் போற்றி பாதுகாத்து வருவதோடுதன் பல வாழ்க்கை போராட்டங்கள் நடுவே ஆறு வயது பெண் குழந்தையும் வளர்ந்து படிக்க வைத்து வருகிறார். இப்படி வாழ்க்கை போராட்டத்தால் சிரமப்படும் பெண்ணை உற்றார் உறவினர். சமுதாயம் பார்க்கும் தப்பான கண்ணோட்டம் இவற்றை எல்லாம் எப்படி கடந்து போனாள்? என்பதே அடுத்த கட்டம். பெண் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் கிருந்துஜா மற்றும் கனடா திரை உலகத்தை சார்ந்த ஜெயாப்பிரகாஷ் டேனிஷ் ராஜ், செந்தில்மகாலிங்கம், மதிவாசன்சீனிவாசகம், சுரபி ஆகியேலும் முக்கிய ,கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.முழுக்க ,முழுக்க கனடாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்ட இப்படத்தின் ஒளிப்பதிவை ஜீவன் ராமஜெயம் & தீபன் ராஜலிங்கம்ஆகியோர் கவனித்து உள்ளனர். இசை ரிஜி R. கிருஷ்ணா எடிட்டிங் முகன் விக்கி Teacher director சந்திரகாந்த் தயாரிப்பு நிர்வாகி ஆனந்த் Lunar Motion Pictures and R Productions இணைந்து தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகிறது . Lunar Motion Pictures and R Productions இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை R. முத்துகுமார் மேற்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.