Actor Jiiva Birthday Celebration At Pokkiri Raja Shooting Spot

1

2

3

4

5

6

7

8

9

“போக்கிரி ராஜா” படப்பிடிப்பில்
200 தொழிலாளர்களுக்கு
ஜீவா பிறந்தநாள் பிரியாணி விருந்து

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் போக்கிரி ராஜா. இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வி.ஜி.பி. அருகில் பிரம்மாண்ட அரங்க அமைப்பில் இமான் இசையமைத்துள்ள “ரெயின்கோ ரெயின்கோ” என்ற பாடலுக்கு ஜீவா, ஹன்சிகா நடனமாடும் வித்தியாசமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் அமைத்து வருகிறார்.

இப்பாடல் காட்சி ஜீவா பிறந்தநாளன்று படமாக்கப்பட்டு வந்த நிலையில் போக்கிரி ராஜா படக்குழுவினர் பிரம்மாண்ட கேக் வரவழைத்து ஹன்சிகா மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியதுடன் படக்குழுவில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய விருந்தாக பிரியாணி வழங்கினார் ஜீவா.

இவ்விழாவில் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார், நடன இயக்குனர் பிருந்தா, ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு மற்றும் படக்குழுவினர் அனைவரும் உடன் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published.