டேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக நடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது,

“இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ் சார் சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்

நாயகி ஹீனா ஸஹா பேசியதாவது,

“இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசிடுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்பதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்

இசை அமைப்பாளர் ஆனந்த் பேசியதாவது,

“நான் தெலுங்கில் 20 படங்களில் இசை அமைத்துள்ளேன். இது தமிழில் எனக்கு முதல் படம். தமிழ் படத்தில் இசை அமைக்க வேண்டும் என்பது என் கனவு. எனக்கு வாய்ப்பளித்த வம்சி கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்..

இயக்குநர் M.V கிருஷ்ணா பேசியதாவது,

“இந்த விழாவிற்கு வருகை தந்த ஜீவா சாருக்கு முதல் நன்றி. டிரைலர் நன்றாக வந்துள்ளது. அதற்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் நன்றி. இது சின்னப்படமாக துவங்கி பெரிய படமாக வளர்ந்துள்ளது. தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு நன்றி. இந்தப்படம் இயக்குநர் படம் கிடையாது. நிச்சயம் தயாரிப்பாளர் படம் தான். அவர் என்னை நம்பி இந்தப்படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தில் ரமேஷ் வில்லன் மட்டும் அல்ல. அவர் ஹீரோவும் கூட. இந்தப்படத்திற்கு பிறகு ரமேஷ் பெரிதாக கவனிக்கப்படுவார். நாயகி ஹீனாவிற்கு ஒரு ப்ரைட் ப்யூச்சர் இருக்கிறது. ஆனந்த் தான் இன்றைய ஹீரோ. அவர் சிறப்பாக இசை அமைத்துள்ளார் பெஸ்ட் வொர்க்கை கொடுத்துள்ளார். ரமேஷ், சுரேஷ் என இரு பாடாலசியர்களும் பாடல்களை நன்றாக எழுதியுள்ளார்கள். படத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்

ஜித்தன் ரமேஷ் பேசியதாவது,

“இந்த விழாவிற்கு நிறைய ஆர்ட்டிஸை கூப்பிட்டிருந்தேன். வர்றேன் என்றார்கள். ஆனால் பிஸி காரணமாக வரவில்லை. என் தம்பி ஜீவாவை கடைசி நேரத்தில் தான் கூப்பிட்டேன். வந்துவிட்டார் அவருக்கு நன்றி. வம்சி என்னிடம் கதை சொல்லும் போது ஹீரோவாக நடிக்க தான் கேட்டார். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ராஜன் சார் இப்படத்தை பெரிய படமாக மாற்றி விட்டார். இசை அமைப்பாளர் பெயர் இங்கு தான் ஆனந்த். ஆந்திராவில் மந்த்ரா ஆனந்த். அவரை ஆந்திராவில் அனைவருக்கும் தெரியும். இந்தப்படத்தில் அவர் சிறப்பான இசையை அமைத்துளார்.இந்தப் படத்திற்கு அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்

ஜீவா பேசியதாவது,

“இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த விழாவில் உங்களை சந்திப்பது சந்தோசமாக இருக்கிறது. இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத் தான் உழைக்கிறார்கள். எல்லோரின் டேலண்ட்டும் எதோ ஒருநாள் எதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ரமேஷுக்கு டர் ஸ்டைலில் சாருக்கானுக்கு அமைந்த மாதிரி இப்படம் அமையும். இசை அமைப்பாளர், ஹீரோயின், அனைவருக்கும் என் வாழ்த்துகள் 🎊. நான் ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது அப்படத்தின் ஆர்ட் டைரக்டரிடம், ஆண்டி ஹீரோ என்பதைப் பேசினேன். அப்போது ஒரு லோக்கல் ஆள் ஆண்டி என்றால் அத்தை தானே? என்று கேட்டார். அப்போது ஆடியன்ஸ் அவ்வளவு வெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். ஆங்கிலப்படம் கூட எல்லாரையும் திருப்தி படுத்தும் படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்தி படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர் மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்; வாழ்த்துகிறேன்” என்றார்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.