Actor Vishal At Nadigar Sangam Free Medical Card Distribute To Members

Nadigar Sangam Free Medical Card Distribute To Members  Event held At Chennai.

A.C.S மருத்துவ கல்லுரி & மருத்துவமனை மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம்  குருதட்சனை திட்டம் இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கும் விழா
விழாவில் கலந்துகொண்டவர்கள்         
தலைவர் –  நாசர்
துணைத்தலைவர்கள் –  பொன்வண்ணன் , கருணாஸ்
பொது செயலாளர் – விஷால்
பொருளாளர் – கார்த்தி
செயற்குழு உறுப்பினர்கள்

ராஜேஷ்,ஜூனியர்.பாலையா,பூச்சிமுருகன்,பசுபதி,ஸ்ரீமன்,A.L.உதயா,ரமணா,பிரேம் குமார்,நந்தா,பிரகாஷ்,தளபதி தினேஷ்,அயுப்கான்,பாலதண்டபாணி,குட்டி பத்மினி,சிவகாமி,சங்கிதா,சோனியா

நியமன குழு உறுப்பினர்கள்
மனோபாலா
லலிதாகுமாரி
ஹேமச்சந்திரன்
J.K.ரித்தீஷ்

விருந்தினர்கள் :
லிஸி
ஸ்ரீப்ரியா
விஜயகுமார்
வேன்னிலாடை நிர்மலா
சச்சு அம்மா
A.L.அழகப்பன்
சுஹாசினி மணிரத்னம்
சித்ராதேவி
மோகன்

ஆகியோர் கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.
சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் போது அனைவரும் மேடையில்
இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினர்.

தலைவர் நாசர் அவர்கள் பேசியதாவது :வெளியூரிலிருந்து இன்று தான் இங்கு
வந்தேன்,இன்று நான் கேட்டறிந்த செய்தி மிகவும் மனவருத்தத்தை
உண்டாக்கியது.நடிகர் சாய் பிரசாந்த் தின் துர்மரண செய்தி,மிகுந்த
மனவருத்தத்தை உண்டாக்கியது.மருத்துவத்தை விட மேலானது மனோதத்துவ முறையிலான
சிகிச்சை.இந்த நடிகர் சங்கத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயம்,நமது
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மனோதத்துவ முறையிலான சிகிச்சை மையம்
அமையும் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்.

இந்த ஆற மாத காலத்தில்,ஆறு வருட பணியை செய்து முடித்திருக்கிறோம்.
தேர்தல் முடிந்த உடன்,தீபாவளிக்கான பொருட்கள் வினியோகம் செய்வது என்று ஒரு பணி.
உறுப்பினர்கள் எல்லாரும் தான் ஒரு நடிகன் என்பதை மறந்து சிறப்பாக வேலை செய்தார்கள்.

நடிகர் சங்கத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் போது நான் இதெல்லாம்
முடியுமா,என்று யோசித்தபோது,இளைய தலைமுறையினர் என்னிடம்,இலக்கை நிர்ணயம்
செய்தபிறகு அதை நோக்கி பயணம் செய்வோம் என்று கூறினார்கள்.அதையே இப்போது
பின்பற்றுகிறோம். சங்கத்தின் முதல் திட்டம் ‘குருதட்சணை திட்டம்’.முதலில் இது ஓய்வூதியம் என்று தானிருந்தது,நமக்கு முன் வந்த நமக்கு குருவாக இருந்த சங்க உறுப்பினர்களுக்கு,ஓய்வூதியம் என்பதற்கு பதிலாக குருதட்சிணை என்று கொடுப்போம் என்று வடிவமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம்.அதற்கு உறுதுணையாக இருந்த ACS அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.

நோய் என்பதற்கு வயதுவரம்பு கிடையாது,எனவே சங்க உறுப்பினர்கள் 3500
பேருக்கும் மருத்துவ வசதி செய்து கொடுக்கிறேன் என்று உறுதிகொடுத்தார்.மேலும் அவர் இந்த 3500 பேரில்,3000 உறுப்பினர்கள்,கலைஞர்கள் இதை பயன்படுத்தாமல் ஆரோக்கியமாக இருந்தால் நான் மிக்க மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கூறினார்.மேலும் அவர், மாதம் 1000 ரூபாய்  வீதம் 150 நடிகர் சங்க உறுப்பினருக்கு  பென்சன் வழங்குவேன் என்றும்

பிரசவத்திற்கு முழுவதும் இலவசம் என்றும்,

பெங்களூரில் உள்ள மருத்துவ மனையில் இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு
மருந்துக்கு மட்டும் செலவு செய்தால் போதும் சிகிச்சை முற்றிலும் இலவசமாக
தரப்படும் ACS அறிவித்துள்ளார்.இதற்கு உங்கள் அனைவரது சார்பாக,உங்களில்
ஒருவனாக நான் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால் அவர்களின் கருத்து:
மூன்றரை வருடங்களுக்கு முன்னர்,நான் யோசித்துக் கொண்டிருந்த ஒரு
விஷயம்,இன்று இந்த பதவியின் மூலம் சாத்தியமானது.இந்த பதவியின் வெற்றியை
அனுபவிப்பது என்பது ஒவ்வொரு நிகழ்வும் நடக்கும்போது மட்டுமே நினைவிற்கு
வருகிறது,உதாரணத்திற்கு நான் காசோலையில் கையெழுத்திடும் போது.
தமிழகத்தைத் தாண்டிய ஒரு வெற்றி நாம் அடைந்திருக்கிறோம்.வருகின்ற 20ஆம்
தேதி நமது சங்க கட்டிடத்தின் மாதிரியை நீங்கள் எல்லாரும் பார்க்க
இருக்கிறீர்கள்..இதற்காக இரண்டு நபர்களுக்கு நாம் நன்றி
சொல்லவேண்டும்.முதலாவதாக பலவிதமான பிரச்சினைகளையும் தாண்டி இதை
முடித்துக் கொடுத்த,திரு.ஐசரிகணேஷ் அவர்கள்,இரண்டாவதாக நமது
உறுப்பினர்கள்.நமது உறுப்பினர்களால் மட்டுமே 6வருடத்தில் நாம்
செய்யக்கூடிய வேலையை 4மாதத்தில் செய்துமுடித்தோம்.நமது உறுப்பினர்கள்
கோவை சரளா,ஸ்ரீமன்,சோனியா,ஹேம சந்திரன் மற்றும் நமது நாடக நடிகர்கள்.
இவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே நடந்திருக்க முடியாது.மூத்த
தலைமுறை நடிகர்கள், நடிகைகளுடன் எப்போதும் நாங்கள் இணைந்திருக்க
வேண்டுமென்று விரும்புகிறோம்.இந்த கட்டிடம் அதற்கு முன்மாதியாக
இருக்கும். இந்த வகையில் ACS அய்யா அவர்களுக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த
நன்றிகள்.நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் எல்லாருடைய
குடும்பத்திலும் நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும்,சக நடிகனாக என்னுடைய
உத்திரவாதமாக இங்கே இதை நான் பதிவு செய்யவிரும்புகிறேன்
இவ்வாறு நடிகர் விஷால் பேசினார்

பொருளாளர் கார்த்தி: இந்தவெற்றிக் கூட்டணியை மூத்த தலைமுறையினரின்
ஆசீர்வாதமாகவே நான் கருதுகிறேன்.நமது தலைவர் நாசர் அவர்கள் பேசும்போது
சொல்வார், சங்கம் என்பது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளும் இடமாக
இருந்தால் நலமாக இருக்கும் என்று,அது சங்க கட்டிடத்தின் மூலம்
கூடியவிரைவில் சாத்தியமாகும். கட்டிடக்குழு அமைத்தாயிற்று.வேலைகள் வேகமாக
நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்து
விஷயங்களுக்கும்  முதற்காரணமாக இருக்கும் ஐசரிகணேஷ்சார் அவர்களுக்கு
எங்கள் நன்றிகள். குருதட்சணை திட்டத்தின் மூலம் ஆரம்பித்த தகவல் சேகரிப்பின் மூலம் அனேக
தகவல்களை (வயதுவாரியாக) தெரிந்துகொண்டோம். மூத்த தலைமுறை நடிகர்களின் உடல்நிலை சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக வருகின்றது.அதை  சிறப்பாக கையாள்வதில் துணையாக இருந்த ACS அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.உறுப்பினர்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்த்துவைக்க சங்கம் எப்போதும் தயாராக இருக்கின்றது. சங்கத்திற்கான
கட்டிடம் தயாரானதும் நாம் இன்னும் நிறைய விஷயங்களை மீண்டும் நாம்
பேசலாம்,நன்றி. இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.