Actor Vishal At Womens Day Celebration

இவன்,அவனாய் மாறிய கணங்கள்….மகளிர் தின கொண்டாட்டம் !! நடிகர் விஷால்
வாழ்க்கையில் எனது 1மணி நேரத்தை இன்று இங்கே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து, வீணடித்துவிட்டேன்.நீங்கள் பேசிய விஷயங்களை பார்க்கும்போது இதெல்லாமே ஏதோ கட்டாயத்தின் பேரில் படித்து முடித்து இப்படி செய்வேன்,இப்படியெல்லாம் சாதிப்பேன் என்று சொல்வதெல்லாம் என்னால் நம்ப முடியாது,நான் இங்கே இதை சொல்லணும்னு முடிவு பண்ணித்தான் இவ்ளோ நேரம் இங்கே இருந்தேன்,சொல்லிட்டேன்.அவ்ளோதான்.நான் என் கண்ணால பார்த்தது,உங்களால் சத்தியமா சாதிக்கமுடியாது…..(ஒரு சில நொடிகள் மெளனத்திற்குப் பிறகு) இந்த விஷால் இல்லை,எந்தக் கொம்பன் சொன்னாலும் நம்பாதீங்க.. எப்பவுமே உங்களுடைய தன்னபிக்கையை தளரவிடாதீங்க.அதுக்காத் தான் இப்படி சொன்னேன். இங்கே நடிகனாக வந்தவர்களுடைய வெற்றி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தோல்வி அடைந்தவர்களை மண்ணுக்குள் போட்டு மூடிவிடுவார்கள்.
என்னுடைய முதல் படத்தில்(செல்லமே) என்னைப் பற்றி ஏளனமாகப் பேசியவர்கள் என்னிடமே வந்து எனக்கு இன்னொரு படம் பண்ணித்தாங்க,நான் கொஞ்சம் கஷ்டத்தில இருக்கேன்னு சொன்னாங்க,அது தான் என்னோட தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.

என்னுடைய முதல் படத்திலிருந்து இன்று வரை நான் சம்பாதித்த சொத்து என்னுடைய தன்னம்பிக்கை. கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதஒரு அனுபவம் எனக்கு இயக்குநர் பாலா அவர்களின் “அவன்,இவன்” படத்தில் 17நாட்களில் கிடைத்தது.அதை உங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். கிட்டத்தட்ட 4மணிநேர மேக்கப்பிற்குப் பிறகு ஷூட்டிங் ஆரம்பிக்கும்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம்,கால்களில் ஆரம்பித்து இடுப்பு மடிப்புவரை அந்த ஷூட்டிங்கில் எடுத்தார்கள்.நாள்கள் செல்ல செல்ல சக டெக்னீசியன்களின்(நண்பர்களின்)கிண்டல்,கேலியுடன் நடந்தது.ஒரு நாள் கேமராமேன்,”சார் கொஞ்சம் சேலை”ன்னு சொல்ல நான் முடியாதுன்னு சொல்லி தவிர்த்துவிட்டேன்.பாலா சார் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.இதை நான் இங்கே பதிவுசெய்வதற்கு ஒரு முக்கியமான காரணம்,என்னுடைய அன்றைய மனநிலை, புதுமுக நாயகி திரையில் கிளாமராக(சில இயக்குநர்களால்)நடித்தபோது,தன் குடும்பம் இதைப் பார்க்குமே என்ற பதைபதைப்புடன் இருந்திருக்கும்,அந்த மனநிலையை ஒத்திருந்தது. என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத அனுபவம்,17 நாள் பெண்ணாக நான் இருந்தது. அந்த கதாபாத்திரத்தின் தாக்கத்தை படப்பிடிப்பு முடிந்தபிறகும் என்னுடைய அம்மா உணர்ந்தார்கள். என்னுடைய வெற்றிக்கு மட்டுமில்லை,என்னால் இயன்றவரை நான் செய்யும் அனைத்து நல்ல செயல்களும்கும் காரணம் என் அம்மா தான்.நான் சில கல்லூரிகளுக்கு விருந்தினராக செல்லும்போது பணம் வாங்குவேன்,முதலில் அது கேவலமாகத் தான் தோன்றியது,ஆனால் யோசித்தேன்,இருக்கிறவங்க கொடுக்கிறாங்க,அதை வைத்து இல்லாதவங்களை படிக்க வைக்கலாம்னு தோன்றிய அந்த எண்ணம் தான்,

கூட்டத்திலிருந்து 66வயதான திருநங்கை விஷாலிடம் ஒரு கேள்வி எழுப்பினார்.’அவன் இவன்’படத்தில் நடித்த பொழுது,உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?
“என்னுடைய கேரியர் இந்த படத்துடன் முடிந்தது என்று பலபேர் என் காதுபடக் கூறினார்கள். நான் கடவுளாய் மதிக்கும் இயக்குநர் பாலா சொல்ல நினைக்கும் ஒரு விஷயம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில்,முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். வேறு எதையும் பற்றி சிந்திக்கவில்லை,
என்று பதிலளித்தார். மேலும் மேலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென திருநங்கைகள் சார்பாக வாழ்த்துகிறேன் அந்த திருநங்கை கூறினார்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.