Actress Nayanthara On Board For Thalapathy Vijay 63 Movie Directed by Atlee, Music by AR Rahman. Produced by AGS Cinemas.
“தளபதி 63” படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா
தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளிபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் “தளபதி 63” படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கின்றனர்.
தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா “தளபதி 63” படத்தில் ஜோடி சேரவுள்ளார்.
பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன்தாராவின் வரவு, “தளபதி 63” படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.
Leave a Reply