“அடடா” பாடல் ஒரு இனிமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் இசைப் பயணமாகும், இது ஒரு பெண்ணின் பார்வை வழியாக முதல் காதலில் தோன்றும் அன்பின் சாரத்தை சித்தரிக்கிறது-இது இந்த வகையான கோணத்தில் காதல் காட்சிகளை சித்தரிப்பது தமிழ் இசை மற்றும் சினிமாவில் அரிதாக நடக்கக்கூடிய ஒன்று.ஒரு பெண் காதலில் விழும் போது ஏற்படும் பரவசத்தையும், முக்கியமான தருணங்களில் ஏற்படும் மேஜிக்கல் மூமென்ட்ஸ்யையும், அவை அனைத்தையும் அவள் ஒருங்கே அனுபவிக்கும் விதமாக இந்த பாடல் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரஞ்சினி ரமேஷ் இயக்கிய இந்த இசை ஆல்பத்தை உயிர்பிக்கும் வகையில் இரண்டு பெண்களின் உணர்வுபூர்வமான குரல் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இந்த வீடியோ ஆல்பத்தின் நாயகனான அஸ்வின் குமாரின் பங்களிப்பு இந்த ரொமான்டிக் பாடலுக்கு மேலும் ஒரு ரசனையை கூட்டி இருக்கிறது.

முற்றிலும் வித்தியாசமான பாடல் வரிகளை கொண்ட இந்த வீடியோ ஆல்பத்திற்கு புகழ்பெற்ற கிடாரிஸ்ட் கெபா ஜெரமியா மற்றும் லெஜெண்டரி ராஜேஷ் வைத்யா வின் வீணையும் சேர்ந்து இந்த பாடலை முத்திரை பதிக்க வைத்திருக்கிறது. ஷ்ரவன் ஸ்ரீதரின் திறமையான தயாரிப்பும், பிரகதி குருவின் குரலும் இந்த இதயப்பூர்வமான படைப்பான “அடடா” இசை வீடியோவை, இசை பிரியர்களுக்கு உண்மையிலேயே மயக்கும் அனுபவமாக மாற்றி இருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் சொல்லப்பட்ட ஒரு புது காதல் கதையில் உங்களை திளைக்க தயாராகுங்கள்!

Leave a Reply

Your email address will not be published.