ரூபாய் படத்தில் நடித்த கிஷோர் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார். நித்யா ஷெட்டி சீராஸ்ரீ அன்சன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சின்னி ஜெயந்த், தம்பி ராமய்யா, ஆர்.என்.ஆர்.மனோகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.பி.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரவிசந்திரன் தயாரித்துள்ளார், சி.சத்யா இசை அமைத்துள்ளார்.

திண்டிவனம் பக்கத்தில் அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் இருக்கும் கோயிலில் வேலை பார்க்கிறார் கிஷோர் ரவிச்சந்திரன். அவருக்கு உறுதுணையாக தம்பி ராமையா இருக்கிறார். அந்தக் கோவிலில் இரவு நேரங்களில் யாரோ சிலர் நடமாடுவதைக் கவனித்து கிஷோர் இரவு நேரங்களில் கூடுதலான கவனத்துடன் காவல் காக்கிறார். ஒரு நாள் இரவில் அப்படி வந்து போனவர்களில் ஒருவர் யார் என்று கண்டுபிடிக்கிறார். அவர்தான் படத்தின் நாயகி, கோவிலில் பூ விற்கும் சிராஸ்ரீ. அவரைச் சந்தித்து கேட்டபின்தான் பல உண்மைகள் கிஷோருக்குத் தெரிய வருகிறது. அது என்ன என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

ஹீரோ கிஷோர் ரவிச்சந்திரன் முதலில் சற்று திணறினாலும் போகப்போக கதையோடு ஒன்றிவிடுகிறார். படத்தில் அக்கா சிராஸ்ரீ, தங்கை நித்யா ஸ்ரீ இருவரும் அவர்கள் கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையாவை வம்புக்கிழுக்கும் அந்த பூக்கடை பாட்டி கூட இயல்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் பல இரவுக் காட்சிகள், அனைத்தும் கோயிலைச் சுற்றிய பகுதிகளில்தான் நடக்கிறது. ஒளிப்பதிவாளர் பாபு பழனியப்பன் இரவு நேரங்களில், பின்னணியில் கோயில் கோபுரங்களுக்கு தனி லைட்டிங் அமைத்து படத்தின் மேக்கிங்கை அழகு கூட்டியிருக்கிறார்.

கோபுரத்தின் மேல் தானியங்களையும் சிலைகளுக்கு கீழ் செல்வங்களையும் ராஜராஜசோழன் பதுக்கி வைத்திருப்பதற்கான காரணங்களை இயக்குநர் விவரித்த விதம் படத்தின் பெரும்பலம். அகவன் போலீஸ் டீமும் இன்வெஸ்டிகேஷனில் கலக்குகிறார்கள். இடைவேளைக்குப் பிறகான படம் வேகமாக நகர்வதில் அந்தப்போர்ஷனுக்கு அதி முக்கியப் பங்குண்டு.

அகவன் கோவில் புதையலை கொள்ளை அடிக்க நினைக்கும் வில்லன் டீன் அதை தடுக்கும் ஹீரோ டீம் வெற்றி யாருக்கு என்பதை விறுவிறுப்புடன் கூறும் படம்.

Leave a Reply

Your email address will not be published.