சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஐரா. ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரபல மீடியாவில் வேலை பார்க்கும் யமுனா எனும் நயன்தாரா அவரது சம்மதம் இல்லாமல் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்யும் பெற்றோரை கோபித்துக்கொண்டு பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்லும் நயன்தாரா., பாட்டியின் பங்களா வீட்டில் பாட்டிக்கு உதவியாக இருக்கும் யோகி பாபுவுடன் சேர்ந்து ’செட்-அப்’ திகில் காட்சிகளை உருவாக்கி, அந்த வீடியோக்களை யூ-டியூப் சேனல் வழியே ரிலீஸ் செய்கிறார். பிரபலமும் ஆகிறார். திடீரென அந்த பங்களா வீட்டில் நிஜமாகவே பேய் வந்து நயன்தாராவுக்குக் குறி வைக்கிறது. பாட்டியையும் அடித்துப் போடுகிறது.

மற்றொருபுறம், சென்னையில் கலையரசனைச் சுற்றி வசிக்கும் சில நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். ஏன் இப்படி தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் நடக்கின்றன? இதில் நயன்தாராவுக்கு என்ன தொடர்பு என்பதுதான் ‘ஐரா’ படத்தின் மீதிக் கதை.

முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. வித்தியாசத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும், கருப்பு நிற நயன்தாரா கிராமத்து பயம், கூச்சத்துடன் குறுகி நடிக்கும் காட்சிகளில் அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அமுதன் எனும் பாத்திரத்தில் கிராமத்து நயன் – பவானியின் காதலராக வரும் கலையரசன் கச்சிதம். கலையரசன் ஒரு எழுத்தாளராகவும் காதலியை நினைத்து கல்யாணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரியாக கிடைத்த கேப்பில் எல்லாம் கிடா வெட்ட முயன்று சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்!

யமுனா நயன்தாராவின் அப்பா, அம்மாவாக வரும் ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன் ஜோடியின் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை

தொழில்நுட்ப கலைஞர்கள்: சுந்தரமூர்த்தி கே. எஸ். இசையில் “மேகதூதம் பாட வேண்டும்… ” பாடல் மட்டும் நம் செவிகளில் படம் முடிந்து வெளியில் வந்தும் ரிங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது! பேய் மற்றும் ஹாரர் படத்திற்கான பின்னணி இசையும் பக்கா! சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஹாரர் படத்திற்கு ஏற்ற மிரட்டல்,

இயக்கம்: இயக்குனர் சர்ஜூன் கே. எம். இந்த படத்தை இன்னும் தெளிவாக அழகாக மெய்யாலுமே மிரட்டலாக இயக்கி இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் படம் முழுக்க பரவிக்கிடந்ததும் அதை, அவர் செய்யாது விட்டிருப்பது பலவீனம். பெரும்பாலான காட்சிப்படுத்தல்கள் பல படங்களில் பார்த்து சலித்த புளித்த பேய் படங்கள் சாயலிலேயே இருப்பது ரசிகனை ஒரு கட்டத்திற்கு மேல் திரையரங்க இருக்கையிலேயே தூங்கச் செய்து விடுகிறது. பேய் வந்தால் மழை வருகிறது கரண்ட் கட் ஆகிறது என பார்த்து சலித்த பேய் பட காட்சிகளை இயக்குனர் நினைத்திருந்தால் குறைத்திருக்கலாம்! ரசிகனை திருப்தி படுத்தி இருக்கலாம்!!

நடிகர் கலையரசன்
நடிகை நயன்தாரா
இயக்குனர் சர்ஜுன்.கே.எம்
இசை சுந்தரமூர்த்தி.கே.எஸ்
ஓளிப்பதிவு சுதர்சன் ஸ்ரீனிவாசன்
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா

Leave a Reply

Your email address will not be published.