ஒய் நாட் ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, வால்வாட்சர்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனி, மணிகண்டன், மதுமதி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஏலே’.
ஐஸ் விற்பனை செய்து வருபவர் சமுத்திரக்கனி வளர்ந்த குழந்தை என்று கூட சொல்லலாம் இவருடைய மகன் மணிகண்டன் சிறு வயதிலிருந்தே தந்தையின் செயல் பிடிக்காததாலும் அதே ஊரில் பண்ணையாரின் மகள் மதுமதி மணிகண்டன் காதலித்து வருகிறார்கள் எதிர்பாராத விதமாக இவர்கள் பிரிய நேர்கிறது, இதனால் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிடுகிறார் மணிகண்டன் திடீரென சமுத்திரக்கனி இறந்துவிடுகிறார் இந்த தகவல் அறிந்து ஊருக்கு வருகிறார் மணிகண்டன் தந்தை மீது சிறிதளவும் பாசம் இல்லாத மணிகண்டன் இறந்த துக்கம் சிறிது கூட இல்லாமல் இருக்கிறார்
எதிர்பாராத விதமாக சமுத்திரக்கனியின் பிணம் காணாமல் போகிறது இந்த பிணத்தை எடுத்தது யார் ? இதற்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை
குச்சி ஐஸ் விற்பவராக வருகிறார். சமுத்திரக்கனி அவரது குறும்புத்தனம் ரசிக்க வைக்கிறது. மகன் மீதான பாசம் நெகிழவைக்கிறது. கோழி குஞ்சிகளை ரோட்டில் விட்டுவிட்டு வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பதாக இருக்கட்டும் ஆட்டுக்குட்டிக்கு பிரசவம் பார்ப்பதாக இருக்கட்டும் இவரது நடிப்பு அருமை.
நாயகன் மணிகண்டனின் இயல்பான நடிப்பும், தந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்திய விதமும் அருமை நாயகி மதுமிதா பார்ப்பதற்கு அழகாவும் நடிப்பிலும் அசத்தி இருக்கிறார். நாயகனுக்கு நண்பர்களாக வருகிறவர்கள் நமக்கு இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தால் வரம் என்று சொல்லுமளவிற்கு இருக்கிறது .
கபேர் வாசுகி, அருள்தேவ் இருவரின் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறது. எளிய காட்சிகளைக் கூட தனது கேமரா கண்களால் பிரமாண்டமாக ஆக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்
‘பூவரசம் பீப்பி’, ‘சில்லுக் கருப்பட்டி’ படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த ஹலிதா ஷமீம் இயக்கியிருக்கும் 3-வது படம் ‘ஏலே’ கதை சொன்ன விதம் அழகு. பார்த்திக்கும், கிராமத்து பணக்காரரின் மகளான நாச்சியாவுக்கும் இடையேயான காதல் பகுதி ரசிக்கும்படி இருக்கிறது. பார்த்தியின் பார்வையில் முத்துக்குட்டியை காட்டியிருக்கிறார். அவர் ஏன் தன் தந்தையை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மொத்தத்தில் ‘ஏலே தந்தை – மகன் தவறான புரிதலை எடுத்து சொல்லும் படம்.
நடிகர்கள்:சமுத்திரக்கனி,மணிகண்டன்
இயக்கம்: ஹலிதா ஷமீம்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா
Leave a Reply