இந்தியாவில் பெறும் ஆதரவுடன் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான ப்ரைம் வீடியோ, ஜூலை 20 மற்றும் 21 பிரைம் டே -2024ஐ முன்னிட்டு தனது பிரைம் உறுப்பினர்களுக்காக 5 மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 14 இந்திய மற்றும் சர்வதேச தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் அற்புதமான தேர்வை வெளியிடவுள்ளது. அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மெகா இந்தியன் ஒரிஜினல் தொடரான மிர்சாபூர் (இந்தி) சீசன்-3 மிர்சாபூரின் சிம்மாசனத்திற்காக மேலும் தீவிரமடைந்த போர்களத்துடன் ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. உலகளாவிய பிளாக்பஸ்டர் ஒரிஜினல் தொடரான தி பாய்ஸ் (ஆங்கிலம்) சீசன் 4-ன் புதிய எபிசோடுகள் பிரைம் டே வரை ஒவ்வொரு வாரமும் வெளிவரும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பிளாக்பஸ்டர் நிகழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டி இவ்விரண்டு தொடர்களும் பல இந்திய மொழிகளில் சப்டைட்டில் மற்றும் டப் செய்யப்பட்டு வெளிவருகின்றது.

ரோஜர் ஃபெடரரின் தொழில்முறை விளையாட்டு களத்தின் இறுதி பன்னிரண்டு நாட்களைப் பின்தொடரும் ஃபெடரர்: ட்வெல்வ் ஃபைனல் டேஸ் (ஆங்கிலம்) ஆவணப்படம், டிஸ்டோபியன் த்ரில்லர் சிவில் வார் (ஆங்கிலம்), சமூக நாடகம் PT சார் (தமிழ்), விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட நாச் கா குமா (மராத்தி), ஹீஸ்ட் காமெடியான கம் கம் கணேஷா (தெலுங்கு), வரலாற்று கதை ஒரிஜனல் தொடர் மை லேடி ஜேன் (ஆங்கிலம்), நகைச்சுவை களம் கொண்ட சர்மாஜி கி பேட்டி (இந்தி), மற்றும் அதிரடி நகைச்சுவை பொழுதுபோக்குச் சித்திரமான இங்க நான் தான் கிங்கு (தமிழ்) போன்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொடர்களுடன் பிரைம் வீடியோவில் பிரைம் டே கொண்டாட்டங்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. இந்த அற்புதமான திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் அனைத்தும் இப்போது பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கிறது.

கொண்டாட்டங்களை மேலும் தொடரும் வண்ணம் பிரைம் வீடியோ ஆக்‌ஷன் த்ரில்லர் படமான கருடன் (தமிழ்), ரொமான்ஸ்காமெடி ஸ்பேஸ் கேடட் (ஆங்கிலம்), மற்றும் துப்பறியும் காமெடி மை ஸ்பை: தி எடர்னல் சிட்டி (ஆங்கிலம்) ஆகியவையும் திரையிடப்படுகிறது.

மேலும் சிறப்புச் சேர்க்கும் நோக்கில், பிரைம் டேவை நோக்கிய பயணத்தின் பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த அனிம் உள்ளடக்கத்தை அனுபவிக்க வேண்டி பிரைம் வீடியோ சேனலில் க்ரஞ்சிரோல்-ஐயும் பிரைம் வீடியோ அறிமுகப்படுத்தியுள்ளது, கூடுதல் சந்தாவாக மாதத்திற்கு 79 ரூபாய் செலுத்தி இதனை ரசிக்கலாம். கூடுதலாக, MGM+, Lionsgate Play, Discovery+, Sony Pictures Stream, hoichoi, ManoramaMAX, Mubi, VROTT போன்ற பிற பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளின் ஆட்-ஆன் சந்தாக்களை வாங்கும் போது 50% வரை தள்ளுபடியை அனுபவிக்கும் வசதியும் பிரைம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரைம் வீடியோ சேனல்கள் மூலம், பிரைம் உறுப்பினர்கள் அதிக நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்கலாம், எவ்வித சிக்கலும் இன்றி உள்நுழைவு செய்யலாம் மற்றும் பில்லிங் வசதியை அனுபவிக்கலாம். அதோடு, எக்ஸ்-ரே, ஆஃப்லைனில் பார்ப்பதற்கான சிங்கிள் வாட்ச்லிஸ்ட் மற்றும் டவுன்லோட் லைப்ரரி போன்ற போன்ற அனைத்து பிரைம் வீடியோ அம்சங்களையும் பல்வேறு OTT தளங்களிலும் அனுபவிக்கலாம்.

வெளிவரும் தேதிகளுடன் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் வரிசை:

காட்சி/திரைப்படம் அசல் மொழி வெளிவரும் தேதி
தி பாய்ஸ் (சீசன் 4) ஆங்கிலம் ஜூன் 13, 2024 துவங்கி ஜூலை 18, 2024 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய அத்தியாயங்களுடன்
பெடரர்: டுவெல்வ் ஃபைனல் டேய்ஸ் ஆங்கிலம் 20 ஜூன் 2024
கம் கம் கணேஷா தெலுங்கு 20 ஜூன் 2024
PT சார் தமிழ் 21 ஜூன் 2024
நாச் கா குமா மராத்தி 21 ஜூன் 2024
மை லேடி ஜேன் ஆங்கிலம் 27 ஜூன் 2024
சிவில் வார் ஆங்கிலம் 28 ஜூன் 2024
ஷர்மாஜி கி பேட்டி ஹிந்தி 28 ஜூன் 2024
இங்க நான் தான் கிங்கு தமிழ் 28 ஜூன் 2024
சத்யபாமா தெலுங்கு 28 ஜூன் 2024
கருடன் தமிழ் 3 ஜூலை 2024
ஸ்பேஸ் கேடட் ஆங்கிலம் ஜூலை 4, 2024
மிர்சாபூர் (சீசன் 3) ஹிந்தி 5 ஜூலை 2024
மை ஸ்பை: தி எடெர்னல் சிட்டி ஆங்கிலம் 18 ஜூலை 2024

Leave a Reply

Your email address will not be published.