பெஸ்ட் மூவீஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் ஷாம், நிரா, அறிமுக நடிகர் ரஞ்சித், வெண்பா, நிழல்கள் ரவி, அருள் சங்கர், ஜீவா ரவி ஆகியோர் நடிப்பில் மார்ச் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் ’அஸ்திரம்’
கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் ஷாம். இவருடைய மனைவி நாயகி நிரா பத்திரிக்கையாளராக வேலை பார்க்கிறார், இவர்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். ஒருநாள் ஷாம் செயின் பறிப்பு கொள்ளையனை பிடிக்க போகும்போது, யாரோ ஒருவர் தோள்பட்டையில் சுட அதனால் வீட்டில் ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து 3 பேர் வயிற்றில் கத்தியால் குத்து கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த தற்கொலைகளின் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை உணர்ந்து, அந்த வழக்கை விசாரிக்க விரும்புகிறார் ஷாம். இதற்கு காவல்துறை உயர் அதிகாரி அருள் சங்கர் அனுமதி வழங்க, சுமந்த் என்ற காவலரின் உதவியோடு தனது விசாரணையை தொடங்கும் ஷாமுக்கு எந்தவித துப்பும் கிடைக்காத இருக்கிறது.
இதனையடுத்து கல்லூரி நண்பர் ஒருவர் ஷ்யாமை பார்க்க வீட்டிற்கு வருகிறார். ஷ்யாம் விசாரித்துக் கொண்டிருக்கும் தற்கொலை சம்பவங்கள் பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை சொல்வதோடு, திடீரென்று அவரும், அவரை தேடி அங்கே வரும் மற்றொருவரும் ஷாம் கண் முன்னே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இறுதியில் இந்த தொடர் கொலைக்கு காரணம் என்ன? எதற்காக என்பதை நாயகன் ஷாம் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’அஸ்திரம்’ படத்தின் மீதிக்கதை.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஷாம் கம்பீரமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். மனைவி மீது காட்டும் அக்கறை, குழந்தை இல்லையே என்ற ஏக்கம், குற்ற்வாளியை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஷாம் மனைவியாக பத்திரிகை நிருபராக நடித்திருக்கும் கதாநாயகி நிரா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். சுமந்த் என்ற கதாபாத்திரத்தில் காவல் உதவியாளர். மனநல மருத்துவராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஜப்பான் மன்னன், செஸ் விளையாட்டு , தொடர் கொலை, மர்மம் ஆகியவற்றை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார்,
மொத்தத்தில் ’அஸ்திரம்’ சதுரங்க விளையாட்டு
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : ஷாம், நிரா, அறிமுக நடிகர் ரஞ்சித், வெண்பா, நிழல்கள் ரவி, அருள் சங்கர், ஜீவா ரவி
இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி
இயக்கம் : அரவிந்த் ராஜகோபால்
மக்கள் தொடர்பு : ஜான்
Leave a Reply