ஆம்பளைய கட்டிப்போடு, அசால்டா சரக்கு போடு!!
ஆண்கள் சங்கத்தை கொதிக்க வைத்திருக்கும்
”பேபிடால்” பட போஸ்டர்
RISING SUN FILM ”K.N.ரவி ஷங்கர் வழங்க ”குத்துஸ் பாஷா” தயாரிக்கும் புதிய படம் ”பேபிடால்”.
1பந்து 4ரன் 1விக்கெட் படத்தில் ஹீரோயினாக நடித்த ”ஹாஷிகா தத்” இவர் தற்போது ”பேபிடால்” என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோயினாக இவரே நடித்தும் இருக்கிறார்.
இவர் (ஹாஷிகா தத்) மது பாட்டிலை கையில் பிடித்துகொண்டு இப்படத்தின் போஸ்டர்களுக்கும், பேணர்களுக்கும் மது குடிப்பதுபோல் போஸ் கொடுத்திருப்பது ஆண்கள் சங்கத்தின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..
இன்னும் சிம்பு பாடிய ”BEEP” பாடல் பிரச்னையே ஓயவில்லை அதற்குள் ”பேபிடால்” பிரச்னை சூடு பறக்க ஆரம்பித்திருக்கிறது.
”பேபிடால்” படத்தின் இயக்குனர் கதாநாயகி இரண்டுமே ”ஹாஷிகா தத்” ஆக இருப்பதும் அவர் பெண்ணாக இருப்பதும் விசயத்தை இன்னும் பரபரபாக்கி உள்ளது.
மக்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஆவிபறக்க கிண்ட அடுத்த அல்வா ரெடி.
Leave a Reply