மதியழகன் முனியாண்டி தயாரிப்பில் கே.வீரக்குமார் இயக்கத்தில் வரலட்சுமி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சேஸிங்’
உயர் அதிகாரியின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரியான வரலட்சுமி காப்பாற்றுகிறார். கடத்தியவர்கள் பற்றி விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் உண்மைகளும், பெண்ணை கடத்தியவர்களின் பகீர் பின்னணியும் தெரிய வருகிறது. அவர்களை கைது செய்யும் பொறுப்பை வரலட்சுமி ஏற்கிறார். தனக்கென நம்பிக்கையான போலீஸ் டீம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு, அதற்கான வேட்டையை தொடங்குகிறார். இதையடுத்து குற்றவாளிகள் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளை செய்வது யார்? அவர்களின் பகீர் பின்னணி என்ன? அவர்களை வரலட்சுமி பிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகி வரலட்சுமி, போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் துணிச்சலாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இணையாக படம் முழுவதும் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.பால சரவணன் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன், மதிழகண் முனியாண்டி, சோனா என அனைவரும் மனதில் நிற்கும் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் 2ம் பாகம் முழுவதும் மலேசியாவில் படமாகி இருக்கிறது. ஈ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு மலேசியாவின் எழிலை அற்புதமாக படமாக்கி இருக்கிறார்.. தஷி இசை காட்சிகளை வேகப்படுத்தி இருப்பதுடன் பின்னணி இசையில் விறுவிறுப்பை சேர்த்திருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எத்தகைய தண்டனை கொடுக்க வேண்டும், என்பதை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், ஒரே காட்சியில் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் கே.வீரகுமார், ஆங்காங்கே சஸ்பென்சு வைத்து சுவாரஸ்யமாக கொடுத்து இருக்கிறார்.
மொத்தத்தில் ‘சேஸிங்’ வேகம்
நடிகர்கள் : வரலட்சுமி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, ஜெரால்ட்,
இசை: தசி
ஒளிப்பதிவு: ஈ.கிருஷ்ணசாமி
தயாரிப்பு: மதியழகன் முனியாண்டி
இயக்கம்: கே.வீரக்குமார்
மக்கள் தொடர்பு : விஜய முரளி & கிளாமர் சத்யா
Leave a Reply