கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், திகங்கனா, முனிஸ்காந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’

சிறுவயதிலேயே தந்தையை இழந்து விடுகிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண் அம்மா ரேணுகா மற்றும் மாமா முனீஸ்காந்த் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். இயற்கை மரணமாக இருந்தாலும் அப்பாவின் இழப்பிற்கு காரணம், தோஷம், ராசி இதுதான் காரணம் என நினைக்கிறார் அதிலிருந்து தான் எது செய்தாலும் ராசி பார்த்து நேரம் பார்த்து தான் எதையும் முடிவு செய்வார். அவரின் ஜோதிட குரு பாண்டியராஜன். கன்னி ராசி பெண் அதுவும் வேறு மாநிலத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பாண்டியராஜன் அர்ஜுனிடம் கூறுகிறார்.

ஜோதிடரின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்து, தன்னை எந்த பெண்ணாவது காதலித்தால் கூட, அவர்களிடம் ராசியை கேட்டு கழட்டிவிடுகிறார். இப்படி தொடர்ந்து பல பெண்களை நிராகரித்து வரும் ஹரிஷ் கல்யாண்.  தனது முன்னாள் காதலி ரெபா மோனிகா ஜானுக்கு திருமணம் நடைபெற, அங்கு மணப்பெண்ணின் தோழியான டிகாங்கனா சூர்யவன்ஷிகாவை காண்கிறார். அவர் மீது ஹரீஷுக்கு காதல் வருகிறது.

ஆனால், நாயகியோ ஹரீஷை பிடித்திருந்தாலும், தனது வாழ்நாள் கனவான விண்வெளி ஆராய்ச்சி செல்லும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்றெண்ணி, அவரின் காதலை ஹரீஷிடம் சொல்லாமல் மறைத்து வருகிறார். இறுதியாக இவர்களின் காதல் கைகூடியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஹரிஷ் கல்யாண் பிளே பாயாக படம் முழுவதும் இளமை ததும்பும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதல், செண்டிமெண்ட், காமெடி என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். அழகு பதுமையுடன் இருக்கும் நாயகி டிகங்கனா, காதல், கவர்ச்சி ஆட்டம் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். மற்றொரு ஹீரோயினான ரெபா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். யோகிபாபு அவ்வப்போது வந்து கதையை மட்டும் சொல்லி செல்கிறார். சாப்பட்டு பிரியராக வரும் முனீஸ்காந்த், ஹரீஷ் கல்யாணின் தாய்மாமனாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் சஞ்சய் பாரதி, சற்று திரைக்கதையிலும் தனது கவனத்தை செலுத்தியிருக்கலாம். சொல்ல வேண்டிய விதத்தில் கதையை சொல்லியிருந்தால் நிச்சயம் கைதட்டல்கள் வாங்கியிருப்பார் இயக்குனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் இளமை துள்ளளோடு இருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண்,ரெபா மோனிகா ஜான்,திகங்கனா,முனிஸ்காந்த்
இயக்குனர் சஞ்சய் பாரதி
இசை ஜிப்ரான்
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா

Leave a Reply

Your email address will not be published.