கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் – கோவை பாலசுப்ரமணியம் தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், சக்யுக்தா, ஷெரின், கு.ஞானசம்பந்தம், பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தில் ராஜா’
VIDEO
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, மனைவி ஷெரின் மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வெளியே சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பும் போது, போதையில் இருக்கும் நான்கு இளைஞர்கள் காரை வழி மறிக்கிறார்கள். ஷெரீனிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் விஜய் சத்யா சண்டை போடுகிறார். அந்த நான்கு இளைஞர்களில் ஒருவர் மரணடைகிறார். மீதி மூன்று பேர் காணாமல் போகிறார்கள். இதில் அடிபட்டு இறந்தது அமைச்சர் ஏ.வெங்கடேஷின் மகன் என தெரிய வருகிறது. உயிர் பிழைக்க குடும்பத்துடன் ஊரை விட்டு ஓடுகிறார் விஜய் சத்யா ஒரு கட்டத்தில் அமைச்சருக்கு தனது மகனை கொன்றது விஜய்சத்யாதான் என தெரிய வர இறுதியில் காணாமல் போன மூன்று இளைஞர்கள் கிடைத்தார்களா? இல்லையா? நாயகன் விஜய் சத்யா அமைச்சரிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’தில் ராஜா’ படத்தின் மீதிக்கதை. ரஜினியின் ரசிகராக நடித்திருக்கும் சத்யா அதிரடி நாயகனாக களமிறங்கியிருக்கிறார். ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் என்று அதிரடி காட்டியிருக்கினார். காதல், ரொமான்ஸ்,ஆக்ஷன், நடனம் என அனைத்திலும் எதார்த்த நாயகனாக வளம் வருகினார். நாயகன் விஜய் சத்யா மனைவியாக நடித்திருக்கும் ஷெரின் அழகு தேவதையாக இருக்கிறார். கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு காட்சிகள் இல்லை. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜய் டிவி பாலா, இமான் அண்ணாச்சி கு.ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள். இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்ற தேர்வாக உள்ளது. மனோவி.நாராயணாவின ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது. ’சாக்லேட்’, ’பகவதி’, ’ஏய்’, ’வாத்தியார்’, ’மாஞ்சா வேலு’, ’மலை மலை’, ’கில்லாடி’ என தொடர்ந்து பல கமர்ஷியல் வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் ரொமான்ஸ் திரில்லர் என அனைத்தையும் வைத்து ஒரு அதிரடி திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். மொத்தத்தில் ’தில் ராஜா’ எதற்கும் துணிந்தவன் மதிப்பீடு : 2.5/ 5 நடிகர்கள் : விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், சக்யுக்தா, ஷெரின், கு.ஞானசம்பந்தம், பாலா, இமான் அண்ணாச்சி இசை : அம்ரீஷ் ஒளிப்பதிவு : மனோ வி.நாராயணா இயக்கம் : ஏ.வெங்கடேஷ் மக்கள் தொடர்பு : மணவை புவன்
Leave a Reply