Director Bharathiraja’s Kutra Paramparai Movie First Look Posters

Director Bharathiraja’s Kutra Paramparai Movie First Look Posters

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா “குற்றப்பரம்பரை” எனும் புதிய படத்தை  இயக்கவுள்ளார்.
குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குனர் இமயம் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க விழா  நாளை காலை 10.30 மணிக்கு ( April 3 ) உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் விமர்சையாக நடைபெறுகின்றது.
இயக்குனர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சுசிந்திரன், பாண்டிய ராஜன், பொன்ராம், எழில், SS ஸ்டான்லி, சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.