சாய் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிவக்குமார் தயாரிப்பில் டாக்டர் சாய் இயக்கத்தில் சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன் ஆகியோர் நடிப்பில் எம்எக்ஸ் ப்ளேயர் ஓடிடி தளத்தில் ஜனவரி 22ல் வெளியாகி இருக்கும் ” இபிகோ 306 “
திருச்சி மாவடத்தில் உள்ள சிறுமயங்குடி கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவி கோடீஸ்வரி (தாரா பழனிவேல்) 12ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுகிறார். மருத்துவக் கனவுடன் இருக்கும் மாணவி 12ம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவர் நீதிமன்றத்தை அணுகுகிறார். ஊடக உதவியையும் நாடுகிறார்.
நல்ல தீர்ப்பு வரும் என்று நினைக்கும் மாணவிக்கு எதிர்மறை தீர்ப்பு வருகிறது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் உள்ளூர் அரசியல்வாதி எப்படி மொத்த பிரச்சினையையும் அரசியலாக்குகிறார்? கோடீஸ்வரிக்கு நியாயம் கிடைத்ததா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கோடீஸ்வரி கதாபாத்திரத்தில் தாரா பழனிவேல் ஏழை மாணவி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய தந்தையாக மறைந்த சீனு மோகன் நடித்திருக்கிறார். அரசியல்வாதியாக வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இயக்குநர் டாக்டர் சாய்
கோவிலில் இருக்கும் படித்த இளைஞர் அரசியல்வாதியால் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதையும் உண்மைக்கு குரல் கொடுக்க நினைக்கும் பத்திரிக்கையாளர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலையால் எதுவும் செய்ய முடியால் தவிப்பதையும் அருமையாக எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் .
நடிகர்கள் : சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன்
இயக்கம் : டாக்டர் சாய்
தயாரிப்பு : சிவக்குமார்
மக்கள்தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply