சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்”ஈஸ்வரன்”

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அனைவரும் மதிக்கத்தக்க பெரியமனிதர் பெரியசாமி (பாரதிராஜா). மனைவியை இழந்த இவர், தனது பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருந்து வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து அவரவர் தனித்தனியான சென்றுவிடுகின்றனர். சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் அனைவரும் பெரியசாமி மனைவியின் நினைவு நாளில் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி வருகின்றனர். அப்போது பெரியசாமியால் சிறை சென்ற ஒருவரின் மூலம் பெரியசாமியின் குடும்பத்திற்கு ஆபத்து வருகிறது. பெரியசாமியை பார்த்துக் கொள்ளும் ஈஸ்வரன் பெரிய குடும்பத்தை காப்பாற்றினாரா? ஆபத்தின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக்தை.

ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சிலம்பரசன் . இவரது நடிப்பை பல படங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் முழுமையான சிலம்பரசன் நடிப்பை பார்க்க முடிகிறது.. இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நந்திதா ஸ்வேதா, மற்றொருவர் நிதி அகர்வால். இருவருக்குமே அதிக வேலை இல்லை. மனதில் நிற்கும்படியான கதாபாத்திரமும் இல்லை.

பெரியசாமி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாரதிராஜாவுக்கே அதிகமான கட்சிகள் உள்ளது. அதற்கு ஏற்றார்போல் அவரும் தனது வழக்கமான சிறப்பான நடிப்பை வெளிப்படுதியுள்ளார்.வில்லனாக ஸ்டண்ட் சிவா மிரட்டி இருக்கிறார். தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை படத்திற்கு பலம். திருவின் ஒளிப்பதிவு கச்சிதம். கிராமத்து அழகை அழகாக காண்பித்து இருக்கிறார்.

கிராமத்து பின்னணியில் குறுகிய நாட்களில் படத்தை இயக்கி இருக்கிறார் சுசீந்திரன். புதுமையான யோசனைகள், ஆனால் பயனற்ற திருப்பங்கள் படத்தின் ஓட்டத்தை பாதிக்கிறது. சிம்புக்கு காட்சிகள் குறைவாகவே உள்ளது. அதிக நேரம் பாரதிராஜாதான் திரையில் தோன்றுகிறார். சிம்புவின் நடிப்பு திறனை இயக்குனர் சுசீந்திரன் முழுமையாக உபயோகப் படுத்தவில்லை என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் “ஈஸ்வரன்” காப்பவன்

நடிகர்கள் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன், நந்திதா ஸ்வேதா
இசை தமன்
இயக்குனர் சுசீந்திரன்
மக்கள் தொடர்பு ஜான்சன்

.

Leave a Reply

Your email address will not be published.