வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா  நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘எட்டுத்திக்கும் பற’  

சாந்தினி தன்னை விட சாதியில் குறைவான ஒரு இளைஞனுடன் சென்னைக்குச் சென்று திருமணம் செய்து கொள்ள கிளம்புகிறார் . சாந்தினியின் சமூகத்தை  சேர்ந்த ஆட்கள் இவர்களை தேடி வருகிறார்கள். பிளாட்பாரத்தில் வசிக்கும் நிதிஷ் வீரா விடிந்ததும் தன் காதலியை திருமணம் செய்து கொள்வதற்கான வேலையாக அலைகிறார். தனது மகன் உயிரைக் காப்பாற்ற 20 ஆயிரம் தேடி இரவில் அலைகிறார் முனிஷ்காந்த். நிதிஷ் ஜோடியிடம் இருந்து தாலியை  திருடி செல்கிறார்.

போலீஸ் என்கவுன்டரில் இருந்து தங்கள் தோழர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் வக்கீல் சமுத்திரக்கனி. இவரிடம் தஞ்சம் அடையும் சாந்தினி – சஜூமோன், காதல் ஜோடிகள் திருமணத்தை செய்த ஏற்பாடு செய்ய ஏற்பாடு செய்கிறார் சமுத்திரக்கனி இறுதியில் சாந்தினி – சஜூமோன், நித்தீஷ் வீரா – சவுந்திகா திருமணம் நடைபெற்றதா ? இல்லையா ?  முனிஷ்காந்த். தனது மகனை காப்பாற்றினா ?  சமுத்திரக்கனி. தங்கள் தோழரை  காப்பாற்றினா ? என்பதே படத்தின் மீதிக்கதை.

அம்பேத்கர் என்ற வழக்கறிஞர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தும் சமுத்திரக்கனி, தனது பாணியில் சாதி பிரிவினைக்கு எதிராகவும், ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார்.

தருமபுரி இளவரசன் – திவ்யாவை நினைவுபடுத்தும் ஜோடிகளாக சஜுமோனும், சாந்தினியும் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் நித்தீஷ் வீரா – சவுந்திகா, தீக்கதிர் குமரேசன் – நாச்சியாள் சுகந்தி என இரண்டு ஜோடி காதலர்களாக வருகிறார்கள். அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கும் முத்துராமனின் கதாப்பாத்திரம், சமகால சாதி கட்சி தலைவரை நினைவுப்படுத்துகிறது.

சிபின்சிவனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையில், “உசுருக்குள் உன்னை வைத்தேன்…” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம்

கருத்து என்னதான் உக்கிரமாக இருந்தாலும் அதை சினிமா மொழியில் சொல்ல இயக்குநர்களுக்கு இருக்கும் சவால் படத்தின் பட்ஜெட்தான்.அந்த வகையில் கையில் என்ன கிடைத்திருக்கிறதோ அதை வைத்து ஒரு நியாயமான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் வ.கீரா.

மொத்தத்தில் ‘எட்டுத்திக்கும் பற’ –  காதலால் ஏற்படும் வலி

நடிகர்கள்  சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா

இசை – எம்.எஸ்.ஸ்ரீகாந்த்

இயக்கம் – கீரா

மக்கள் தொடர்பு கோபிநாதன்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.