Ravi Teja, Shruti Hassan, Anjali, Lakshmi Rai starring Evanda (Yevanda) Movie Stills. Directed by Gopichand Malineni and Music by S.Thaman. Balupu telugu film dubbed in tamil titled “Evanda“. PRO – Mounam Ravi.
ரவிதேஜா – ஸ்ருதிஹாசன் – அஞ்சலி நடிக்கும்
“ எவன்டா “
அமோக வெற்றி பெற்ற “ செல்வந்தன், புருஸ்லீ – 2 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “ எவன்டா “ தெலுங்கில் “ பழுப்பு “என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படமே தமிழில் “ எவன்டா “ என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த படத்தில் ரவிதேஜா நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஸ்ருதிஹாசன், அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராய் லட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஜெய் ஜெயபிரகாஷ், ஆதித்யா மேனன், பரமாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – வின்சென்ட் / இசை – எஸ்.எஸ்.தமன் பாடல்கள் – அருண்பாரதி, திருமலை சோமு, வடிவரசு, மீனாட்சி சுந்தரம். கதை – கோனா வெங்கட், கே.எஸ்.ரவீந்திரா நடனம் – ராஜுசுந்தரம், பிருந்தா, சேகர் / கலை – ஏ.எஸ்.பிரகாஷ் திரைக்கதை, இயக்கம் – கோபிசந்த் இணைத் தயாரிப்பு – வெங்கட்ராவ், சத்ய சீத்தாலா தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத் வசனம், தமிழ் உருவாக்கம் – ARK.ராஜராஜா படம் பற்றி தமிழ் உருவாக்கம் செய்திருக்கும் A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம்…
இது முழுக்க முழுக்க காமெடி கலாட்ட படம். படம் பார்க்கும் அனைவரும் நிச்சயமாக வயிறுகுலுங்க சிரிப்பார்கள். நாயகனுக்கு அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ் தனது மகன் யாரையும் கல்யாணம் செய்ய மறுப்பதால். பிரகாஷ்ராஜே பெண்களிடம் அவரது மகனுக்காக லவ் புரபோஸ் சொல்லி போலீசில் பல முறை அடி வாங்குவார். அப்படி ஒருமுறை காசுக்காக தினமும் பசங்களை ஏமாற்றும் ஸ்ருதிஹாசனிடம் தனது மகனை காதலிக்குமாறு சொல்ல ..அவரும் காதலிப்பது போல் நடிக்க இடையில் ஸ்ருதிஹாசனால் பாதிக்க பட்ட நாயகனின் நண்பன் ஒருவன் அவளைப்பற்றி அணைத்து உண்மைகளையும் சொன்னதால் ரவிதேஜாவும் காதலிப்பது போல் நடிக்கிறார்.
இதற்கிடையில் வில்லன் கும்பல் பிரகாஷ்ராஜையும் ரவிதேஜாவையும் கொள்ளுவதற்காக ஊரெல்லாம் தேடி வருகிறார்கள். இறுதியில் நாயகன் யாரை திருமணம் செய்தார், வில்லன்கள் எதற்காக அப்பா மகனை தேடி வருகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. காமெடி ஆக்ஷன் படமாக உருவாகிறது எவன்டா என்றார்.
Leave a Reply