இன்றை சூழ்நிலையில் குழந்தைகளுக்கு படிப்புடன், தற்காப்பு கலை அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு எடுத்து சொல்லி இருக்கும் திரைப்படம் எழுமின்.

அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா என ஆறு சிறுவர்கள்.. குங்பூ, சிலம்பம், கராத்தே, பாக்சிங் என ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொருவர் திறமைசாலிகள். இதில் அர்ஜுன் மட்டும் தொழிலதிபரான விவேக்-தேவயானியின் மகன். மற்றவர்கள் அனைவரும் சாதாரண குடும்படுத்து பிள்ளைகள் தான். இவர்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார் விவேக். இந்த சிறுவர்களுக்கும் கோச்சிங் கொடுக்கும் அகாடமி நடத்திவரும் அழகம்பெருமாள், பீஸ் கட்டவில்லை என அர்ஜுனை தவிர மற்றவர்களை வெளியே அனுப்பிவிடுகிறார்.
விவேக்கின் மகன் மாநில அளவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் சாம்பியன் ஆகிறான். அர்ஜுன் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் திடீரென ஏற்படும் மாரடைப்பால் உயிரை விடுகிறான். மகனின் இழப்பால் துவண்டு போகும் விவேக் மகனின் பெயரில் அகாடமி ஆரப்பிக்கிறார். இந்த 5 சிறுவர்களுக்கும் பயற்சி அளித்து பைனல் போட்டிக்காக ஐதராபாத் அனுப்பி வைக்கிறார்.
ஆனால் வழியிலேயே இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகிறது.. அதேசமயம் காரில் சென்ற கோச் மற்றும் குழந்தைகள் யாரையும் காணவில்லை. குழந்தைகளுக்கு என்ன ஆனது..? அவர்களால் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள முடிந்ததா..? என்பது மீதிக்கதை.
இளம் வீரர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் பிரவீன், வினீத், ஸ்ரீஜித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா ஆகியோர்தான் படத்தின் கதாநாயகர்கள். கதாபாத்திரத்தை உணர்ந்து தங்களால் முடிந்தளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் பின்னி எடுக்கிறார்கள்.
விவேக்கின் மனைவியாக, பாசமான அம்மாவாக, மற்ற குழந்தைகளையும் தனது குழந்தையாக அரவணைக்கும் தாயாக நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார் தேவயானி. அகாடமி நடத்துபவராக வரும் அழகம்பெருமாளின் நடிப்பிலும், வசனத்தை வெளிப்படுத்தும் உடல்மொழியிலும் அவ்வளவு யதார்த்தம்.
போலீஸ் அதிகாரியாக வரும் பிரேம்குமார் குழந்தைகளை தேட எடுக்கும் முயற்சிகளில் ஒரு துடிப்பான போலீஸ் அதிகாரியாகத்தான் நம் கண்களுக்கு தெரிகிறார்.
அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா என்கிற ஆறு குழந்தைகளும் ஆறு தூண்களாக இருந்து படத்தை தாங்கி பிடிக்கின்றனர். குறிப்பாக அந்த கால்மணி நேர க்ளைமாக்ஸ் காட்சியில் உலுக்கி எடுத்து விடுகின்றனர். ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கிள் மைக்கேல் ராஜும் இயக்குனர் வி.பி.விஜியும் குழந்தைகளின் ஆக்சன் காட்சிகளை மிகைப்படுத்தல் இல்லாமல் காட்சிப்படுத்தியுள்ளனர்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.