இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதிஷ், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பிரண்ட்ஷிப் ’
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்களான ஹர்பஜன் சிங், சதிஷ், பாலா ஆகியோர் படிக்கும் வகுப்பில் ஒரே ஒரு மாணவியாக சேருகிறார் லாஸ்லியா சில நாட்களில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு தெரிய வருகிறது. . இதனால் வருத்தமடையும் நண்பர்கள், லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். எதிர்பாராத விதமாக லாஸ்லியா கொலை செய்யப்படுகிறார் . இறுதியில் லாஸ்லியாவை கொலை செய்தது யார்? நண்பர்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் வெள்ளித்திரையில் நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கும் படம் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவருடைய கதாப்பாத்திரமும், நடிப்பும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் தான் இருக்கிறது. நடனம், ஆக்ஷன் என திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிக்பாஸ் புகழ் லாஸ்லியா முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற துள்ளல் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார்.ஆக்ஷன் கிங் அர்ஜுன் வக்கீலாக நடித்துள்ளார். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் அனல் பறக்கிறது என்றே கூறலாம். காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்து இருக்கிறது.
எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, வெங்கட் சுபா ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் அமைதியாகவே இருந்து வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஜே.எஸ்.கே.சதீஷ்.
இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமாரின் பாடல்கள் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற துள்ளல் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது .
நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா. அதே நேரத்தில் நட்பை வெளிப்படுத்தும் விதமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. இயக்குநர்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், என்ற கருத்தை சொல்லும் போது, காட்சிகளை மிக நேர்த்தியாக கையாண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.வாழ்த்துகள்.
மொத்தத்தில் ‘பிரண்ட்ஷிப் ’ மூழ்கும் கப்பல்
நடிகர்கள் : ஹர்பஜன் சிங், ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் , லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், M. S. பாஸ்கர் ,பழ .கருப்பையா ,வெங்கட் சுபா,மைம் கோபி ,வேல்முருகன், வெட்டுக்கிளி பாலா
தொழிநுட்பக்குழு :
இயக்கம் – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா
தயாரிப்பு – ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா
இசை – DM உதயகுமார்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்
.
Leave a Reply