மாயவன் திரைப்படத்திற்கு பிறகு சிவி குமார் இயக்கம் மற்றும் தயாரிப்பில் , பிரியங்கா ரூத், டேனியல் பாலாஜி, அசோக் ,வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள், ஈ.ராமதாஸ் ,பி. எல் .தேனப்பன்… உள்ளிட்டோர் நடிக்க வெளிவந்திருக்கும் திரைப்படம் “கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்”
கல்லூரியில் படிக்கும் போது சாய் பிரியங்கா ருத், அசோக்கை காதலிக்கிறார். வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அசோக்கை மதம் மாறி திருமணம் செய்துக்கொள்கிறார் பிரியங்கா. எல்லா மனிதர்களையும் போல இவர்களின் வாழ்வும் இயல்பாக நகர்கிறது. அசோக் ஒரு போதைப்பொருள் கடத்தில் கும்பல் நடத்தும் கம்பெணி ஒன்றிற்கு கணக்காளராக வேலைக்கு சேர்கிறார். இவர்கள் கடத்தல் தொழில் செய்கிறார்கள் என்பது அசோக்கிற்கு தெரியாது.
இந்நிலையில், ஒரு நாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் அசோக் தன் வீட்டு வாசலிலே காவல் துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுகிறார். எந்த தவறும் செய்யாத தன் கனவரை போலீசார் ஏன் சுற்றுக்கொன்றனர். தன் கனவர் தவறு செய்திருக்கிறார் என்றால் அந்த வேலையை செய்யச்சொன்ன முதலாளியும் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்தானே என்று அதற்கான காரணத்தை தேடி கண்டுபிடிக்கிறார் சாய் பிரியங்கா. தன் கணவனின் கொலைக்கு காரணமானவர்களை தீர்த்துக்கட்ட மும்பையில் இருக்கும் இன்னொரு ரவுடியான டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். அவரிடம் நன்கு பயிற்சி பெற்று சென்னை வரும் பிரியங்கா தன் எதிரிகளை பழிவாங்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
தனி ஒரு பெண்ணாக மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்து செல்கிறார் நாயகி ப்ரியங்கா ரூத். ஒவ்வொரு காட்சியிலும் அனுபவ நடிகையின் நடிப்பு தெரிகிறது. இப்படத்திற்காக அவரின் மெனக்கெடல், உழைப்பு எல்லாம் நன்றாகவே உணர முடிகிறது. அதற்கான தீர்வும் எட்டியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் மிரட்டி எடுத்திருக்கிறார். இப்படத்தில் நாயகி பிரியங்காவுக்கு காதல் கணவராக வரும் “முருகா” அசோக் கொஞ்ச நேரமே வந்து நெஞ்சை கணக்க வைத்து விட்டு செல்கிறார். அதே மாதிரி பிரியங்கா ரூத்துக்கு மும்பையில் ட்ரையினிங் தரும் டேனியல் பாலாஜியும் ‘சென்னை எனக்கு… எனக்கு… ‘என சொல்லி சென்னை வராமலேயே செத்துப் போகிறார்… என்பது கொடூரம் !ஆனாலும், இவர்கள் இருவரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர் என்பது பாராட்டுக்குரியது!
இயக்குனர் வேலு பிரபாகரன், வில்லனாக நடித்து அனைவரையும் உறைய வைக்கிறார். முதல் காட்சியிலேயே தனது கேரக்டருக்கு உயிர் கொடுத்து அனைவரையும் அச்சம் கொள்ள வைக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. அறிமுக ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் கைகளில் கேமரா விளையாடியிருக்கிறது. படத்தில் முதல் பாதியில் ஒரு வகையான ஒளிப்பதிவும், இரண்டாம் பாதியில் ஒரு வகையான ஒளிப்பதிவையும் கொடுத்து நம்மை காட்சியில் கட்டிப் போட்டுவிட்டார் ஒளிப்பதிவாளர். கோலிவுட்டில் தனக்கென ஒரு முத்திரையை நிச்சயம் பதிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மெட்ராஸ்’ பற்றி தமிழ் சினிமாவில் பல படங்கள் ரத்தம் தெறிக்க வந்தாலும், இந்த வகையான ரத்தம் புது வகையாகதான் இருக்கிறது. காட்சிமைப்பு மட்டுமல்லாமல், யூகிக்க முடியாத கதையையும் திருப்பத்தையும் கொடுத்த இயக்குனர் சி வி குமாரை நிச்சயம் பாராட்டலாம்.
நடிகர் அஷோக்
நடிகை சாய் பிரியங்கா ருத்
இயக்குனர் சி.வி.குமார்
இசை ஹரி டப்யூசியா
ஓளிப்பதிவு கார்த்திக் கே.தில்லை
மக்கள் தொடர்பு நிகில் முருகன்
Leave a Reply