அடுக்குமாடி குடியிருப்பில் நாயகன் நட்ராஜ், தன் மனைவி அனன்யா, மகன் அஸ்வந்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் இதே பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் லால், 13 வருடத்திற்கு பிறகு பிறந்த தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். இந்த மகனுக்கு இதய நோய் ஏற்படுகிறது. மகனை காப்பாற்ற வேண்டும் என்றால் அவனது குரூப் ரத்தம் மற்றும் அதே வயதில் உள்ள சிறுவன் வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார்.

நட்ராஜ் மகனின் ரத்தம் மற்றும் இதயம் தன் மகனுக்கு பொருந்தும் என்பதை அறிந்துக் கொள்ளும் லால் . இதனால், நட்ராஜின் மகனை கொன்று இதயத்தை எடுத்து மகனுக்கு பொருத்த நினைக்கிறார். இதையறிந்த நட்ராஜ் தன் மகனின் உயிரை காப்பாற்ற போராடுகிறார்.

இறுதியில் நட்டி – லால் யார் மகனை காப்பாற்றினார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

நடுத்தர குடும்பத்தலைவன் வேடத்துக்கு மிகச் சரியாக இருக்கிறார் நாயகன் நட்டி. மனைவியிடம் கொஞ்சல் குழந்தையிடம் செல்லம் அடுத்தவர் பாதிப்பைக் கண்டு பதறும் மனம், கண் முன்னால் நடக்கும் கொடுமையைக் கண்டு கலங்கி நிற்பது என எல்லாக் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
மகனைக் காக்கும் போராட்டத்தின் போது பார்ப்பவர்களையும் பதட்டப்படுத்துகிறார்.நீங்க எத்தனை பேர் இருக்கீங்கன்னு தெரியாது ஆனா நீங்க இருக்கிறது என் வீடுடா எனும்போது கெத்து காட்டுகிறார் நட்டி.

நாயகி அனன்யா நல்ல தேர்வு. விசயம் தெரியாமல் பதறுவதும் தெரிந்ததும் நடுங்குவதும் என பொருத்தமாக நடித்திருக்கிறார். குட்டி பையன் அஸ்வத், அலறுவது மனதை பதற வைக்கிறது. என்ன நடக்கிறது, என்று தெரியாமல் பயந்து நடங்கும் குழந்தையின் நிலையை எண்ணி வருந்துவதை விட, வில்லன் மீது பெரும் கோபம் ஏற்படுகிறது.

வில்லனாக நடித்திருக்கும் லால் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தையின் உயிரை பலி கேற்கும் அவரது கொடூர எண்ணத்தோடு, அவரையும் சேர்த்து பொசுக்க வேண்டும், என்று படம் பார்க்கும் அனைவரும் நினைக்கும் வகையில், கொடூரமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டுகிறார்.

சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு சமமாக திகிலூட்டுகின்றன. நவின் ரவீந்தரனின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.

மொத்தத்தில் ‘காட் ஃபாதர்’ மகனை காக்க நினைக்கும் தந்தையின் போராட்டம்.

நடிகர் நட்டி நட்ராஜ், அனன்யா, லால்
இசை நவின் ரவீந்தரன்
இயக்குனர் ஜெகன் ராஜசேகர்
மக்கள் தொடர்பு நிகில் முருகன்

Leave a Reply

Your email address will not be published.