ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, ராதா ரவி, யோகி பாபு ஆகியோரது நடிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கொரில்லா’

ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா மூவரும் நண்பர்கள்.மாநகர பேருந்துகளில் பயணிகளிடம் பணத்தை சுருட்டுவது, மருந்து கடையில் பகுதி நேர வேலை செய்து அங்கிருந்து மருந்துகளை திருடுவது, போலி மருத்துவராக இருப்பது என எளிதில் மாட்டிக்கொள்ளாத சிறிய சிறிய தவறுகளை செய்து பிழைக்கும் இளைஞனாக வருகிறார் ஜீவா.காங்’ என்ற சிம்பன்ஸி குரங்கை ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றிவந்து தன்னோடு வைத்துள்ளார். குரங்கும் அவரது சகோதரன் போல பாசமாக பழகுகிறது.

பொறியியல் பட்டதாரியான சதீஷ் ஆட்குறைப்பு காரணமாக தனியார் ஐடி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். நடிகராக வேண்டும் என்று இருக்கும் விவேக் பிரசன்னா ,இவர்கள் இருக்கும் வீட்டிற்கு கீழே மதன் குமார் குடியேறுகிறார். இவர்களின் நான்கு பேரையும் ஒன்றாக இணைக்கிறது பணப்பிரச்னை. வழியேதும் இல்லாமல் வங்கியில் கொள்ளை அடிக்க செல்கிறார்கள்.

வங்கியில் கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது, சிம்பான்ஸி குரங்கின் சுட்டி தனத்தால் வங்கியில் சிக்கிக்கொள்ள, போலீஸ் ரவுண்டப் செய்துவிடுகிறது. பிறகு, போலீசிடம் இருந்து தப்பித்தார்களா, இல்லையா என்பது தான் மீதிக்கதை.

ஜீவா மிகவும் துடிதுடிப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் பழைய ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. சதீஷ், விவேக் பிரசன்னா, விவசாயியாக வரும் மதன்குமார் என அனைவரும் அவர்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள் நாயகி ஷாலினி பாண்டேவிற்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

காங்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்பான்ஸியை இந்த அளவுக்கு நடிக்க வைத்ததற்காகவே இயக்குநரை பாராட்டாலாம். சில இடங்களில் குரங்கை நடிக்க வைப்பதைக் காட்டிலும், அது செய்யும் சில்மிஷங்களை படம்பிடித்து மேனஜ் செய்திருக்கிறார்கள்.

சாம்.சி.எஸ் இசையும், குருதேவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் கொடுத்திருக்கிறது. ரூபனின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது.

விவசாயப் பிரச்னை, நீட், இந்தி திணிப்பு உட்பட சமீப கால அரசியலை விமர்சிக்கும் திரைப்படங்கள் சமீப நாட்களாக அதிகம் வெளியாகி வருகிறது. சினிமா வெறும் பொழுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல் சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை வெகுஜனமக்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாக சினிமா மாறியிருப்பதில் மகிழ்ச்சி. யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டிய கருத்துகளை நகைச்சுவையாக எளிமையாக மக்களிடம் கடத்தி செல்லும் பணியை படைப்பாளிகள் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் கொரில்லா திரைப்படம் விவசாயிகளின் ஒரு பிரச்னைக்கு தீர்வு கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறது.

நாட்டின் பெரும் பிரச்னை விவசாயப்பிரச்னை என்பதை உணர்ந்து இருக்கிறார் இயக்குநர். அதை மைய்யப்படுத்தி மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

நடிகர்கள் : ஜீவா,ஷாலினி பாண்டே, யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன்
இசை சாம் சி.எஸ்
இயக்குனர் டான் சாண்டி

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.