சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா, கஞ்சா கருப்பு, மதுசூதனன் நடிப்பில் டிஸ்னி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘இரும்பு மனிதன்’
நாயகன் சந்தோஷ் பிரதாப் ஹோட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். நன்றாக சமைக்கத் தெரிந்த காரணத்தினால் அவர் ஹோட்டல் நல்லமுறையில் செல்கிறது. 2 அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சந்தோஷ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் குழந்தையும் தத்தெடுத்து மூவரையும் சொந்த மகன்களாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு திருட வரும் கஞ்சாகருப்பு உதவியாளர் ஆகவே பணிக்கு வைத்துக் கொள்கிறார்.
இந்நிலையில் பல இடங்களை மிரட்டி பிடுங்கும் மதுசூதனன் கண்களில் சந்தோஷின் கடை படுகிறது. சந்தோஷை மிரட்டி பணிய வைக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் தொழிலில் அபார வளர்ச்சி அடையும் சந்தோஷ் பல ஹோட்டல்களுக்கு முதலாளியாகிறார்.
வளர்ப்பு மகன்களை பிரித்துவிடுவார் என்பதால் காதலி அர்ச்சனாவை ஒதுக்கும் சந்தோஷ், அதன் பின்னர் கல்யாணம் செய்துகொள்ளாமல் மகன்களுக்காகவே வாழ்கிறார். ஆனால் மகன்களோ தந்தையிடமிருந்து சொத்தை பறித்துக்கொண்டு சந்தோசை நடுரோட்டில் விடுகின்றனர். மகன்கள் செய்த துரோகத்தில் இருந்து சந்தோஷ் மீண்டாரா ? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சந்தோஷ் இதுவரை வெளிகாட்டாத வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டியுள்ளார். இளவயதில் இருக்கும் சுறுசுறுப்பு தன்மையும் முதுமையில் இருக்கும் பொறுமையையும் ஒருசேர காட்டியுள்ளார் .படத்தையே தன் நடிப்பால் தான் தாங்கவேண்டும் என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.
நாயகியாக வரும் அர்ச்சனா துரத்தி துரத்தி காதல் செய்கிறார் திடீர் என்று வேறு ஒருவரை தீர்மானம் செய்து கொள்வது என தனது கதாபாத்திரத்தை உணர்ந்தது நடித்துள்ளார். கஞ்சா கருப்பு கலகலப்பாக கதையை நகர்த்துகிறார். இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். மதுசூதனன் தோற்றங்களிலும் உடல்மொழியிலும் வித்தியாசம் காட்டுகிறார். மகன்களாக வரும் நிஷாந்த், அகில், திலீப் மூவரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
கேஎஸ்.மனோஜின் இசையும் கே.கோகுலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மகன்களை நம்பும் பெற்றோர்களுக்கு ஏற்படும் நிலைமையை இப்படம் மூலம் கூறியிருக்கிறார் இயக்குனர். டிஸ்னி. சமூகத்துக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் அவசியமான படமாக இரும்பு மனிதன் அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘இரும்பு மனிதன்’ உழைப்பால் உயர்ந்தவன்
நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா, கஞ்சா கருப்பு
இசை கே.எஸ்.மனோஜ்
இயக்குனர் டிஸ்னி
மக்கள் தொடர்பு நிகில் முருகன்
Leave a Reply