அமேசான் காட்டுப்பகுதியில் மர்மான இடத்தில் நிலவின் கண்ணீரால் பூக்கும் அற்புத மலரின் இதழ்கள் இருக்கின்றன. இறக்கும் தருவாயில் இருப்பவர்களின் உயிரை காப்பாற்றும் என்று சொல்லப்படிருப்பதால அந்த மலரை எடுத்து வர செல்கிறார் கதாநாயாகி. அவரை பின் தொடர்கிறது. வில்லன் கூட்டம். மலரை எடுக்க கதாநாயகிக்கு உதவுகிறார் ஹீரோ டிவைன் ஜான்சன். பயங்கரமான அமேசான் காட்டுபகுதியில் ஆபத்தான காட்டாற்றை கடந்து சென்று நிலவின் கண்ணீர் மலரை இருவரும் கண்டு பிடிக்கின்றனர். அங்கு வரும் வில்லன் கூட்டம் அவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை மீறி கதாநாயகியால் அந்த மலரை கொண்டு வர முடிகிறதா இல்லையா ? என்பதே படத்தின் கதை.
ஹாலிவுட் பேண்டஸி படங்கள் என்றால் நம்ப முடியாத காட்சிகள் இருக்கும் இந்த படத்திலும் அதுபோன்ற காட்சிகள் உள்ளன. அவை எல்லாம் சாகசமாக அமைக்கப்படிருப்பதுதான் படத்துக்கு பிளஸ்.
டிவைன் ஜான்சன் 300 ஆண்டுகளாக எவ்வளவோ முயன்றும் நிலவின் கண்ணீர் மலரை கண்டு பிடிக்க முடியாமல் போனது ஆச்சர்யம்தான். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் டிவைன் ஜான்சன் பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார்.
ஹீரோயின் எமிலியின் துடிப்பான நடிப்பு படத்தை டாப்பான லெவ;லுக்கு கொண்டு செல்கிறது. அடிதடி சண்டை காட்சிகளிலும் பின்னி எடுக்கிறார். காட்டு வாசிகள் மத்தியில் சிக்கிக்கொண்ட பிறகும் உயிரைப்பற்றி கவலைப்படாமல் அவர்களை எதிர்த்து பேசுவதும். துணிச்சலாக மோதுவதும் என்று ஜமாய்க்கிறார்.
டிவைன் ஜான்சனும் தன் பங்குக்கு புலியிடன் சண்டை, காட்டாற்று வெள்ளத்தில் படகை செலுத்துதல், உயரத்திலிருந்து கீழே விழுவது என சாகசம் செய்திருக்கிறார். எமிலியின் தம்பியாக வருபவர் காமெடி பீஸாக வலம் வருகிறார்.
படத்திற்காக போடப்பட்டிருக்கும் நீர்வீழ்ச்சி பிரமாண்ட மலை, தூண்கள், காட்டுவாசிகளின் இருப்பிடத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மரத்திலான அசத்தலான அரங்கு கண்களை நிரப்புகிறது
மொத்தத்தில் ஜங்கில் குரூஸ் – ஒரு சாகச பயணம்.
நடிப்பு: டிவைன் ஜான்சன், எமிலி ப்ளண்ட், எட்கர் ராமிரெஸ், ஜாக் வைட் ஹால், ஜெஸ்ஸி ப்ளமென்ஸ், பால் ஜியாமிடி
கதை: க்ளன் ஃபிஹரா ஜான் ரிக்வ்வா, மைக்கேல் க்ரீன்
திரைக்கதை: க்லன் ப்ஹாரா, ஜான் நிவ்வா
தயாரிப்பு: ஜான் டேவிஸ், ஜான்ஃபாக்ஸ், டிவைனே ஜான்சன், ஹிராம் கார்ஷியா, [யோ ஃபிளின்
இயக்கம்: ஜவ்மே கொலெட் செர்ரா
Leave a Reply