புஷ்பநாதன் ஆறுமுகம் & வி இன்டர்நேஷனல் தயாரிப்பில் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில் விக்னேஷ் ரவி, டிஎஸ்கே, சரண்யா ரவிச்சந்திரன், பிரியா தர்ஷினி, நிரஞ்சன், அபிராமி முருகேசன், ‘கபாலி’ பெருமாள், ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’க.மு – க.பி’
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகன் விக்னேஷ் ரவியும், நாயகி சரண்யா ரவிச்சந்திரனும் காதலித்து வர பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் விக்னேஷ் ரவி வேலையை விடுகிறார்.
கணவர் விருப்பத்தை புரிந்துக் கொள்ளும் மனைவி சரண்யா அவருக்கு துணை நிற்கிறார். விக்னேஷ் ரவி ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் கதை கூறி வருகிறார். ஐடி துறையில் வேலை பார்க்கும் சரண்யா குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்.
இப்படி சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டை வருகிறது. நாளடைவில் இதே சண்டை மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனையடுத்து இருவரும் பிரிந்து விடுவதென முடிவு செய்து விவாகத்து கேட்டு நீதிமன்றம் செல்கிறார்கள்.
இறுதியில் விக்னேஷ் ரவி – சரண்யா இருவருக்கும் விவாகத்து கிடைத்ததா ? இல்லையா? விக்னேஷ் ரவியின் இயக்குனர் ஆசை கைகூடியதா? இல்லையா? என்பதே ’க.மு – க.பி’ படத்தின் மீதிக்கதை.
விக்னேஷ் ரவி மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் இருவரின் நடிப்பு இயல்பாக உள்ளது. விக்னேஷ் ஒரு இயக்குனராவது எவ்வளவு பெரிய வலி என்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கினார் சிறு வேடம் என்றாலும் அதை சிறப்பாக செய்யக் கூடியவர் சரண்யா இத்திதிரைப்படத்திலும் எதார்த்த நடிப்பின் முலம் அனைவரின் கவனம் பெறுகிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டி எஸ் கே அவரது காதலியாக வரும் பிரியதர்ஷினி, மனைவியை அடிமையாக நடத்துகிற நிரஞ்சன், அவருக்கு மனைவியாக அபிராமி முருகேசன், கபாலி பெருமாள் என் அப்படத்தின் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் தர்ஷன் ரவி குமாரின் இசையில், ஜெகன் கவிராஜின் வரிகளில் “இறவியே…” என்ற ஒரு பாடல் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. ஜி.எம்.சுந்தர் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்கள் திருமணத்துக்கு முன்பும் திருமணத்திற்கு பிறகும் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை
மையக்கருவாக வைத்து திரைப்பத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் புஷ்பநாதன் ஆறுமுகம் இத்திரைப்படத்தை அனைவரும் புரியும் விதத்தில் கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’க.மு – க.பி’ – வாழ்க்கை பாடம்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : விக்னேஷ் ரவி, டிஎஸ்கே, சரண்யா ரவிச்சந்திரன், பிரியா தர்ஷினி, நிரஞ்சன், அபிராமி முருகேசன்
இசை : தர்ஷன் ரவிகுமார்
இயக்கம் : புஷ்பநாதன் ஆறுமுகம்
மக்கள் தொடர்பு : கே.எஸ்.கே.,செல்வா
Leave a Reply