ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால், ஜோயா ஹுசைன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காடன்’dha
நாயகன் வீரபாரதி ( ராணா) தங்களுக்கு சொந்தமான காட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுகின்றனர் ராணாவின் குடும்பத்தினர். சிறுவயதில் இருந்தே அந்த காட்டில் வளரும் ராணா, அந்த காட்டின் பாதுகாவலராக இருக்கிறார் காட்டுப் பகுதியில் லட்சம் மரங்களை நட்டு, அங்குள்ள யானைகள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் காவலனாக இருக்கிறார். காட்டில் ஒரு மரத்தை வெட்டினால் கூட ( ராணா) காடன் விடமாட்டார்.
ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பர் காடுகளில் இருக்கும் மரங்களை ஆள் வைத்து வெட்டுகிறார். அந்த நபர் டெவலப்பர் மட்டும் இல்லை சுற்றுச்சூழல் அமைச்ச,ர் குறிஞ்சிநாதன் (ஆனந்த் மகாதேவன்) சகல வசதிகள் கொண்ட குடியிருப்பு பகுதியை உருவாக்க விரும்புகிறார் அமைச்சர். ஆனால் அவர் ஆசை நிறைவேறுவதற்கு காடன் மற்றும் யானைகள் தடையாக இருக்கிறார்கள். அமைச்சரை எதிர்த்து போராடும் ராணா, வனத்தையும், வனவிலங்குகளையும் காப்பாற்றினாரா இல்லையா, என்பதே ’காடன்’படத்தின் மீதிக்கதை.
காடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராணா, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வனத்துக்கும், விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள உறவை தன் நடிப்பின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். யானைகளை பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் பறவைகளுடன் பேசுவது என இயல்பான நடிப்பபை வெளிப்படுத்தி இருக்கிறார்.
யானைப் பாகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் குறைந்த அளவிலான காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார். இவருக்கும் ஜோயா ஹுசைனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. பத்திரிகையாளராக வரும் ஸ்ரேயா பில்கனோகரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.அமைச்சராக நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவன், ஆகாஷ், ஸ்ரீகாந்த், சம்பத்ராம், ரவிகாலே, போஸ் வெங்கட் ஆகியோர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
அசோக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம், காடுகளின் எழில் கொஞ்சும் அழகை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.. ஷாந்தனு மொய்த்ராவின் இசையில் பாடல் இனிமை. பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார். ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவையும் சிறப்பாக அமைந்துள்ளது.
வனங்களை பணமாக்கும் அதிகார வர்க்கத்தினரிடம் இருந்து வனங்களை பாதுகாக்கவில்லை என்றால், எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், என்ற பாடத்தை ஜனரஞ்சகமான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.காடுகள் அழிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்லி இருக்கும் விதம் அருமை.
மொத்தத்தில் ‘காடன்’ காட்டின் காவலன்
நடிகர்கள் : ராணா,விஷ்ணு விஷால், ஜோயா ஹுசைன்
இசை ஷாந்தனு மொய்த்ரா
இயக்குனர் பிரபு சாலமன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply