ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் சார்பில் ராணா டக்குபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் ஆகியோர் தயாரிப்பில் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டக்குபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, காயத்ரி சங்கர், பிரிஜேஷ் நாகேஷ், பக்ஸ், பரதன், நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’காந்தா’
கருப்பு வெள்ளை காலகட்டத்தில் தொடங்கும் கதை பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், அவரை உருவாக்கிய குரு இயக்குநர் சமுத்திரக்கனி இருவருக்கிடையே சில கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகிறார்கள்.
இந்நிலையில் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவை மூடும் நிலைக்கு செல்ல அதன் தயாரிப்பாளர் ரவீந்திர விஜய் பாதியில் நின்று போன இயக்குநர் சமுத்திரகனியின் கனவு படமான ’சாந்தா’ திரைப்படத்தை எடுப்பது என்று முடிவு செய்து சமுத்திரகனியிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
இதனையடுத்து நடிப்பு சக்கரவார்த்தியான துல்கர் சமுத்திரகனியின் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். ஆனால், கதையின் கிளைமேக்ஸில் மாற்றம் வேண்டும் என்று துல்கர் சல்மான் தயாரிப்பாளர் ரவீந்திர விஜயிடம் கூறுகிறார் . .
தனது கனவு கதை என்பதால், படத்தை எப்படியாவது முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி, தான் எழுதிய கிளைமாக்ஸுடன் தான் படம் முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
மோதல்களுக்கு இடையே தொடர்ந்து நடக்கும் படப்பிடிப்பில் நாயகன் துல்கர் , நாயகி பாக்யஸ்ரீக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இதனால், மேலும் கோபமடையும் இயக்குநர் சமுத்திரக்கனி தன்னுடைய கிளைமாக்ஸ்படி படம் முடிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்தில் நாயகி பாக்யஸ்ரீ துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இறுதியில் நாயகி பாக்யஸ்ரீயை கொலை செய்தது யார்? துல்கர், சமுத்திரக்கனி இருவருக்கிடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்ததா? இல்லையா? இயக்குநர் சமுத்திரகனியின் கனவு படமான ’சாந்தா’ திரைப்படம் வெளியே வந்ததா ? இல்லையா? என்பதே ’காந்தா’ படத்தின் மீதிக்கதை.
நடிப்பு சக்கரவர்த்தி என்ற கதாபத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். நாட்டிற்ப்பு, நடை, தோற்றம், கோபம் என அனைத்திலும் தன் திறமையை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பழம்பெரும் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் தனது கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ அழகு தேவதையாக வருகிறார். கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதியின் கதாபாத்திரம் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல துணை நிற்கிறது.
துல்கர் சல்மானின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் மாமனராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜானு சந்தர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. டானி சஞ்செஸ் ஒளிப்பதிவு கருப்பு வெள்ளை காலத்திற்கு கொண்டு செல்கிறது.
இயக்குனருக்கும் நடிகருக்கும் இருவருக்கு இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இத்திரைப்படத்தை யாரும் யூகிக்க முடியாத வகையில் ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை நகர்த்தி சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’காந்தா’ – மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டக்குபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திர விஜய்
இசை : ஜானு சந்தர்
இயக்கம் : செல்வமணி செல்வராஜ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

Leave a Reply