ஆசிரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே ‘காஞ்சனா 3’.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சென்னையில் இருக்கும் ராகவா லாரன்ஸ் தன் தாத்தா – பாட்டியின் 60-ம் கல்யாணத்துக்காக குடும்பத்தினருடன் கோவை செல்கிறார். அப்போது ஒரு இடத்தில் காரை நிறுத்தி எல்லோரும் சாப்பிடுகிறார்கள். அதே இடத்தில் இதற்கு முன் ஒரு பயங்கரமான பேயை ஒரு ஆணியில் அடித்து வைத்திருந்தது தெரியாமல் ராகவா லாரன்ஸ் அதை கையில் பிடுங்குகிறார். அவர் மீது ரோஸி, காளி என்ற பேய்கள் இறங்குகிறது.

அந்த பேய் லாரன்ஸ்குள் புகுந்து அவருடைய வீட்டிற்கே வருகிறது. ராகவா லாரன்சின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸ் மீது காதலலுடன் அவரையே சுற்றி வருகிறார்கள். அவரும் மூன்று பேரிடமும் நெருக்கமாக பழகி வருகிறார்.பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. உண்மையில் அந்த ரோஸி, காளி என்ற பேய்கள் யார்? அவர்களின் முன் கதை என்ன? காளி லாரன்ஸின் உடலுக்கு புகுந்து யாரைப் பழிவாங்குகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதே படத்தின் மீதிக்கதை.

ராகவன், காளி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் தனது வழக்கமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் முதல் பாதி ஆக்ஷன், ஹரார், காமடி, கிளாமர், டான்ஸ், பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இண்டர்வேல் பிளாக் பகுதியில் வரும் காட்சிகள் ரசிகர்களை மனதை வருடும் வகையில் உள்ளது.

இதிலும் கோவை சரளா தன் பங்குக்கு மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஹீரோயின்கள் வேதிகா, ஓவியா, மற்றொரு புதுமுக ஹீரோயின் என மூன்று பேரும் லாரன்ஸை காதலிப்பதாக உள்ள காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுள்ளது டெல்லி கணேஷ், அனுபமா குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, சூரி தான் வரும் காட்சிகளில் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார்.

ஒரு இயக்குநராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் இயக்கியிருப்பது பெரிய பலம். படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காமெடியையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார். காஞ்சனா 2-க்கு ஓரளவுக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் காஞ்சனா முதல் பாகத்தை நியாபகப்படுத்தும்படி உருவாகி இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனலாம்.

மொத்தத்தில் கோடையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை குதூகளிக்க வேண்டிய ஹாரர் படம் தான் காஞ்சனா 3.

Leave a Reply

Your email address will not be published.