வயாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், கவுதம் வாசுதேவ் மேனன், ரக்ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’
நாயகன் துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்ஷன் இருவருக்கும் சாப்ட்வேர் இஞ்சினியர் என்று சொல்லிக் கொண்டு ஆன்லைனில் பொருட்களை வாங்கி சின்னத் திருட்டு தனங்கள் செய்து மற்றவர்களுக்கு பொருட்களை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள். இந்நிலையில் ரித்து வர்மாவின் மீது காதல் கொண்ட துல்கர் காதலை சொல்ல ரிது வர்மா ஏற்றுக்கொள்கிறார் அதே போன்று ரக்ஷனுக்கும் ரித்து வர்மாவின் தோழியான நிரஞ்சனி மீது காதல் வருகிறது. நால்வரும் இணைந்து கோவாவிற்கு சென்று வாழ்க்கையை நடத்த திட்டமிடுகின்றனர்.
இந்த நிலையில், ஆன்லைன் திருட்டு வழக்கை கையில் எடுத்து தீவிரமாக விசாரிக்க துவங்குகிறார் போலீஸ் அதிகாரி கெளதம் வாசுதேவ் மேனன். இவ்விருவரையும் பிடிக்க தீர்மானம் செய்கிறார். கோவாவிற்கு சென்ற பின்னரே காதலிகளின் உண்மை சுயரூபத்தை அறிகின்றனர் நண்பர்கள் இருவர் அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
துல்கர் சல்மானுக்கு இப்படம் 25-வது படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்கும் படமாக இப்படம் அமைந்துள்ளது. ஸ்டைலிஷ் இளைஞன் அதே சமயம் பரப்பரப்பான காட்சிகளில் அதற்கேற்ற நடிப்பு என நிறைவு செய்கிறார். அவரது நண்பராக வரும் ரக்ஷன், சின்னத்திரையில் தொகுப்பாளராக பிரபலமான இவர் இப்படத்தில் காமெடியில் ரிலாக்ஸ் செய்கிறார்,
ரிது வர்மா அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பிற்பாதியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் நிரஞ்சனிக்கு கொஞ்சம் சீரியசான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன். இவரது கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்.
மசாலா காஃபி ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும் ரகம். பாஸ்கரனின் ஒளிப்பதிவு (கலர்ஃபுல் லொகேஷன்ஸ்) பெரிய பலமாக அமைந்துள்ளது,
ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் செதுக்கி எடுத்தாற் போல் அழகு படுத்தி வைத்திருக்கிறார். வசனங்கள், கதை, திரைக்கதை என்ற அனைத்தையும் மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி. திரைக்கதையில் பல திருப்பங்கள் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பார்ப்பவர்கள் மனதை கொள்ளையடிக்கும்
நடிகர்கள் துல்கர் சல்மான், கௌதம் வாசுதேவ் மேனன், ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன்
இசை மசாலா காஃபி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
இயக்கம் தேசிங் பெரியசாமி
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா
Leave a Reply