வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ், லால், யோகிபாபு, ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கர்ணன்’
பொடியங்குளம் என்ற கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ் இராணுவத்தில் சேர முயற்சி செய்து வருகிறார். இவர்கள் ஊரில் பஸ் நிறுத்தம் கிடையாது. இங்கு இருக்கும் மக்கள் மேலூர் எனும் ஊருக்கு சென்று தான் பேருந்து ஏற வேண்டும். கல்லூரியில் சேருவதற்காக மேலூரில் பஸ் ஏற கௌரியை சிலர் அசிங்கப் படுத்துகிறார்கள்.
இதனால் கோபமடைந்த தனுஷ், அவர்களை அடித்து தும்சம் செய்கிறார்.. பதிலுக்கு தனுஷை பழிவாங்க நினைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு செல்ல நிற்கும்போது, பஸ் நிற்காமல் செல்கிறது. இதனால் கோபமடையும் தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் அந்த பஸ்ஸை அடித்து நொறுக்குகிறார்கள்.அதனால் அந்த கிராமத்து மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது.
இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி நட்டி, ஊர் பெரியவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைக்கிறார். இதையறிந்து வரும் தனுஷ், காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிவிட்டு அவர்களை அழைத்து செல்கிறார்.. கோபமடைந்த நட்டி, தனுசையும் ஊர் மக்களையும் பழிவாங்க நினைக்கிறார். அதே வேளையில் தனுசுக்கு ராணுவத்தில் சேர பணி நியமன ஆணை வருகிறது .இறுதியில் தனுஷ் ஊர் மக்களை காப்பாற்றினாரா ? இராணு வேலையில் சேர்ந்தாரா இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை .
தனுஷ் கர்ணன் கதாப்பாத்திரத்தில் கம்பீரமாக வலம் வருகிறார்.. ஊர் பெரியவர்களுக்காக தனது கோபத்தை அடக்கிக்கொள்ளும் காட்சிகளாகட்டும், பேருந்தை உடைக்க கட்டையுடன் வரும் காட்சி மற்றும் காவல்துறை அதிகாரியிடம் தனது மக்களுக்காக பேசும் காட்சியாகட்டும், அனைத்திலும் அனைத்துவிதமான உணர்வுகளையும் கச்சிதமாக வெளிக்காட்டி நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.. .நாயகியாக வரும் ரஜிஷா விஜயன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
தனுஷ், கர்ணன் கதாப்பாத்திரத்தில் கம்பீரமாக வலம் வருகிறார்.. ஊர் பெரியவர்களுக்காக தனது கோபத்தை அடக்கிக்கொள்ளும் காட்சிகளாகட்டும், பேருந்தை உடைக்க கட்டையுடன் வரும் காட்சி மற்றும் காவல்துறை அதிகாரியிடம் தனது மக்களுக்காக பேசும் காட்சியாகட்டும், அனைத்திலும் அனைத்துவிதமான உணர்வுகளையும் கச்சிதமாக வெளிக்காட்டி நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.. .நாயகியாக வரும் ரஜிஷா விஜயன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
குணசித்திர கதபாத்திரத்தில் நடித்துள்ள லால், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். பாட்டியிடம் 10 ரூபாய் திருடும் காட்சியில் கவர்கிறார். அதேபோல் யோகிபாபுவை நகைச்சுவைக்காக பயன்படுத்தாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தி இருப்பது அருமை. தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி பிரியா பாசம் கோபம் தனது பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார். . போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜ், நடிப்பில் மிரட்டி இருக்கிறார் .
கிராமத்து அழகை மாறாமல் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். அனைத்து பாடல்களுமே ரசிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக ‘கண்டா வரச்சொல்லுங்க பாடல் ‘ அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ். கிராமத்து மக்களின் வாழ்வியலையும் கஷ்டங்களையும் கண் முன் நிறுத்துகிறார். கதாபாத்திர தேர்வும் அருமை. படத்தில் உள்ள பல விஷயங்கள் பாராட்டும்படி உள்ளது.
மொத்தத்தில் ‘கர்ணன்’மக்களின் காவலன்
நடிகர்கள் : தனுஷ், லால், யோகிபாபு, ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்
இசை சந்தோஷ் நாராயணன்
இயக்குனர் மாரி செல்வராஜ்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது :
Leave a Reply