வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி,  சந்தீப் கிஷன், ஹரிஸ் கல்யாண், சாந்தனு, டி.சிவா,  ரெஜினா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, சிஜா ரோஸ்,  பெஞ்சமின்,  பஞ்சு சுப்பு, சம்பத், ஜெயபிரகாஷ், சங்கிலி முருகன்,  யூகி சேது ஆகியோர் நடிப்பில்  வெளியாகி இருக்கும் படம்  ‘கசட தபற’

தனியார் மருந்து கம்பெனியில் வேலை பார்க்கும் பிரேம்ஜியின் உதவும் மனப்பான்மையை பார்த்து காதலிக்கிறார் ரெஜினா. இருவரும் காதலித்து வரும் நிலையில், ரெஜினாவின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேம்ஜி மீது திருட்டு பட்டம் கட்டி அடியாட்களை வைத்து கடத்திவிடுகிறார். கவசம் என்ற தலைப்புடன் தொடங்கும் இந்த கதை, மற்ற 5 கதைகளுடன் சேர்ந்து பயணிக்கிறது. இறுதியில் பிரேம்ஜி என்ன ஆனார்? பிரேம்ஜி, ரெஜினாவின் காதல் ஒன்று சேர்ந்ததா? மற்ற கதைகளின் கதாபாத்திரங்கள் எப்படி இவர்கள் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரேம் ஜி , ப்ரியா பவானி சங்கர், சந்தீப் கிஷன் , ரெஜினா, சாந்தனு, ஹரீஷ் கல்யாண், விஜயலக்‌ஷ்மி, வெங்கட் பிரபு, சிஜா ரோஸ், வித்யா ப்ரதீப் , சம்பத் என கதையில் நடித்த ஒவ்வொருவரும் தனிக் கவனம் ஈர்த்துள்ளனர்.. அனைவரிடத்திலும் நேர்தியாக நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்…

தெளிவான திரைக்கதை படத்திற்கு பெரிய பலம். ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையும் படத்திற்கு கூடுதல் பலம். விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் ஆகியோரின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.

இவ்வளவு சமாச்சாரங் களை உள்ளடக்கிய கதையாக கசட தபற படத்தை இயக்கி இருக்கி றார் சிம்புதேவன். ஏதோ ஆறு கதைகளை எடுத்தோம் என்றில்லாமல் எல்லாவற்றையும் வாழ்க் கையோடு தொடர்புப்படுத்தி  இருப்பது படத்துக்கு வலு சேர்க்கிறது. வழக்கமாக  ஜோக் அடித்துக்கொண்டு காமெடியனாக வரும் பிரேம்ஜிக்கு பொறுப்பான ஒரு வேடத்தை கொடுத்து அவரிடம் நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் ‘கசட தபற’ சிறப்பு. படைப்பு

நடிப்பு: வெங்கட் பிரபு, பிரேம்ஜி,  சந்தீப் கிஷன், ஹரிஸ் கல்யாண், சாந்தனு, டி.சிவா,  ரெஜினா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, சிஜா ரோஸ்,  பெஞ்சமின்,  பஞ்சு சுப்பு, சம்பத், ஜெயபிரகாஷ், சங்கிலி முருகன்,  யூகி சேது,

தயாரிப்பு: பிளாக் டிக்கெட் கம்பெனி வெங்கட் பிரபு,

ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன்,  பாலசுப்ரமணியம்,  ஆர்.டி.ராஜசேகர்,  ஷக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர்

இசை: யுவன் ஷ்ங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன்,  ஜிப்ரான், பிரேம்ஜி, சாம் சி எஸ். ,சீன் ரோ டன்

இயக்கம்: சிம்பு தேவன்

Leave a Reply

Your email address will not be published.