அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘திரைப்படம் கீ’

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பேன், கணினி பயன்பாடு அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது. அதனால் ஏற்படம் பாதிப்பும், பிரச்னைகள் என்ன என்பதை பற்றிய கதைதான் ‘கீ’.

கல்லூரி மாணவரான ஜீவா, கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்கள் ஹக்கிங் செய்வதில் கெட்டிக்காரராக இருக்கிறார். பாட்ஷா என்ற வைரஸ் ஒன்றை கண்டுபிடிக்கும் ஜீவா அதை வைத்து பலரது ஸ்மாட்போன்களை ஹக் செய்து, அந்த தகவல்கள் மூலம் விளையாட்டாக பெண்களுடன் பழக முயற்சிக்கிறார். அந்த ரூட்டில் பத்திரிகை நிருபரான அனைகாவுடன் நட்பாகி அவருடன் சுற்றி வருகிறார். அதே நேரத்தில் காலேஜ் ஜூனியர் நிக்கி கல்ராணி உடன் காதல் செய்கிறார்.

இதே வேலையில் சென்னையில் பலர் தற்கெலை செய்துக்கொள்கிறார்கள். சிலர் கொலை செய்கிறார்கள். இதனிடையே ஜீவாவின் தோழியும் தற்கொலை செய்துக்கொள்கிறார். காதல் தோல்வியால் அவர் இறந்து விட்டார் என்று நினைக்கும் ஜீவா தன்னுடைய தந்தைக்கு நடக்கும் விபத்துக்கு பிறகு இதற்கெல்லாம் காரணம் ஹேக்கர்ஸ் கும்பல் என்று தெரிந்துக்கொள்கிறார். அவர்களை கண்டு பிடித்து ஜீவா அழித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஜீவா எப்போதும் போல் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். அப்பாவேடும், நண்பர்களோடும் சேர்ந்து செய்யும் அரட்டையில் ரசிக்க வைக்கிறார். ஹேக்கர்களை கண்டுபிடிக்க அவர் செய்யும் யுக்தியில் அதிகம் கவனம் ஈர்க்கிறார்.

நிக்கி கல்ராணி தனக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக நடித்து முடித்துள்ளார். அனைக்கா சோடியை வெறும் கவர்ச்சிகாக மட்டுமே பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.

ஆர். ஜே. பாலாஜி எப்போது போல் தன்னுடை யதார்த்த பேச்சால் படத்திற்கு பலம் சேர்க்கிறார். தேவையான இடங்களில் அரசியல் நையாண்டி செய்து கவனம் ஈர்க்கிறார். வில்லனாக நடித்திருக்கும் கோவிந்த் பத்ம சூர்யா. ஜீவாவுக்கும் இவருக்கும் நடக்கும் டெக்னாஜி மோதல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது படம்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

சமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிறப்பான கதையை தயார் செய்திருக்கிறார்.

நடிகர் ஜீவா அமர்
நடிகை நிக்கி கல்ராணி
இயக்குனர் காலீஸ்
இசை விஷால் சந்திரசேகர்
ஓளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம்
மக்கள் தொடர்பு ரியாஸ் கே.அகமது

Leave a Reply

Your email address will not be published.