விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.

விஜய் ஆண்டனி பேசியவை:

வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல நான்  நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும். ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் அவர்தான். இயக்குனர்கள் அட்லி ,லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய் ,அஜித் போன்றவர்களை  வைத்து படம் இயக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கு நன்றி. இந்த கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி. மக்களிடம் இந்த படத்தை கொண்டு சேர்த்ததற்கு  ஊடக நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

தயாரிப்பாளர் டி .டி ராஜா பேசியவை,

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போதே ஊரடங்கு வந்தது.6 மாதத்தில் முடிக்க வேண்டிய படம் 20 மாதங்கள் கடந்தது. OTT இல்  இப்படத்தை கொடுப்பதற்கு எங்களுக்கு அதிக விலையில் வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இப்படத்தின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது .தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஊடகத்துறையும் ,பத்திரிகை துறையும் தான்.

இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் பேசியவை:

என் அம்மாவிடம் நான் சொல்லியிருந்தேன் பத்திரிகையாளர்களை நம்பிதான் நான் படம் எடுக்கிறேன் என்று .எனது கருத்துக்களை மக்களிடம் அவர்கள் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்பினேன் .நான் நினைத்ததை விட சிறப்பாகவே தற்போது நடந்திருக்கிறது. மெட்ரோ படத்திற்கு எனக்கு பல பாராட்டுகள் கிடைத்தன .ரசிகர்களுக்கு பிடித்த கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என தயாரிப்பாளர் சொல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .இந்த படத்திற்காக எனக்கு அதிக சப்போர்ட் அளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. விஜய் ஆண்டனி தான் உண்மையான கோடியில் ஒருவன். கோடியில் ஒருவன் ஜெயிப்பான் என முதலில் நம்பியது விஜய் ஆண்டனி சார் தான். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ,ஊடக நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .கண்டிப்பாக கோடியில் ஒருவன் 2 படம் இருக்கிறது.

Kodiyil Oruvan Movie Thanks Meet

Leave a Reply

Your email address will not be published.