தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூத்தன்’.

இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரீஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன், நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபுதேவாவின் தம்பியான நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என பெரிய திரையுலக பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.
பாலாஜி இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவு – மாடசாமி, படத் தொகுப்பு – பீட்டர் பாபியா, கலை – சி.ஜி.ஆனந்த், நடனம் – அஷோக் ராஜா, மக்கள் தொடர்பு – ஷேக், சுரேஷ், நிர்வாக தயாரிப்பு -மனோஜ் கிருஷ்ணா, தயாரிப்பு – நீல்கரிஸ் முருகன், எழுத்து, இயக்கம் – ஏ.எல்.வெங்கி.
சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
ஏராளமான சினிமா கலைஞர்கள் வசித்து வரும் ‘சினிமா நகரி’ல் தன் தாய் ஊர்வசியுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் ராஜ்குமார்! ’பேட்டரி பாய்ஸ்’ என்ற நடனக்குழுவில் நடன கலைஞராக இருக்கும் ராஜ்குமாருக்கு பரதநாட்டியம் சொல்லி கொடுக்கும் ஸ்ரீஜிதா கோஷ் மற்றும் நடன கலைஞரான அவரது தங்கை சோனல் சிங்குடன் நட்பு ஏற்படுகிறது! இந்நிலையில் ராஜ்குமார் வசித்து வரும் ‘சினிமா நகர்’ விற்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட, அந்த காலனியை மீட்க ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிற நிலையில் ராஜ்குமார், சிங்கப்பூரில் நடக்கும் நடன போட்டியில் பங்கேற்று பல கோடிகள் மதிப்பிலான முதல் பரிசை வெல்ல முயற்சி செய்கிறார். அதே நேரம், ஸ்ரீஜிதா கோஷ் மற்றும் அவரது தங்கை சோனல் சிங்குக்கு சொந்தமான வீடு, நடன கலைஞரும் ஸ்ரீஜிதா கோஷின் முன்னாள் கணவருமான நாகேந்திர பிரசாதால் கடனில் இருப்பதை அறியும் ராஜ்குமார், அவர்களுக்கும் உதவ முன் வந்து இருவரையும் நடனப் போட்டியில் பங்கேற்க செய்ய முற்படுகிறார்! இந்நிலையில் இவர்களுக்கு வில்லனாக வருகிறார் நாகேந்திர பிரசாத்! நாகேந்திர பிரசாதின் வில்லத்தனங்களை எதிர்கொண்டு நடனப்போட்டியில் ராஜ்குமார் மற்றும் அவரது குழுவினரால் முதல் பரிசை வெல்ல முடிந்ததா? இல்லையா? என்பதே ‘கூத்தனி’ன் மீதிக்கதை!
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராஜ்குமார், சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடன திறமையை திறம்பட செய்திருக்கிறார். நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் வலம் வரலாம்.  நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகேந்திர பிரசாத் திரையில் தோன்றி ரசிகர்களை நடனத்தால் கவர்ந்திருக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள்
டி.ராஜேந்தர் குரலில் ‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ செம குத்து குத்த வைக்கிறது. கூத்தனம்மா கூத்து, காதல் காட்டுமிராண்டி பாடல்கள் கேட்பதற்கு மிக அருமை. சொல்லாத சொல்லாத, தீராத தீண்டல்கள் பாடல்கள் நல்ல மெலடிக்கள். பாடல்களை சிறப்பாக கொடுத்த இசையமைப்பாளர் பால்ஸ் ஜி

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.