பி.என்.பி. சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் பி.என்.பல்ராம் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கிரிஷ்ணம்’.

மனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் கதாநாயகனாக அக்‌ஷய் கிருஷ்ணன் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடித்துள்ளனர்.

ஒரு நாள் காலேஜ் கல்சுரல் புரோம்கிராம்கள் நடக்கும் போது நாயகன் மயங்கி விழுகிறான். பின்னர் தான் அவனுக்கு இதயத்தை சுற்றி ஒரு கட்டி இருப்பது தெரிய வருகிறது. கட்டியை அகற்றினாலும் அகற்றாவிட்டாலும் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.

மருத்துவர்கள் கைவிட்ட காரணத்தால் கடவுள் குருவாயூரப்பனையே நம்பி உள்ளனர் பெற்றோர். அப்போதுதான் ஒரு அதிசயம் நடக்கிறது.

அது என்ன? ஹீரோ உயிர் பிழைத்தானா? அது எப்படி? என்பதெல்லாம் மீதிக்கதை.

உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு.

சாய்குமார் மற்றும் சாந்தி கிருஷ்ணா இருவரும் நாயகன் பெற்றோர்களாக நடித்துள்ளனர். ஒரு பிள்ளைக்கு தீராத நோய் இருந்தால் பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை தங்கள் உணர்வுகளில் கொடுத்துள்ளனர்.

ஓரிரு பாடல்கள் ரசிகர்களை கவரும். பின்னணி இசை ஒரு சில இடங்களில் பேசப்படும் வகையில் உள்ளது.

இரண்டாம் பாதி முழுவதும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சென்றதால் அதில் நாடகத்தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே கமர்சியல் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றத்தை கொடுக்கும்.

தன் மகனின் உயிரை காப்பாற்றிய கடவுள் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இந்த படத்தை எடுத்துள்ளார் பலராம்.

நடிகர்கள்: அக்சய் கிருஷ்ணன், ராதிகா, சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய்பாபு, வினீத், ராஜீவ் பணிக்கர், அஞ்சலி உபசனா மற்றும் பலர்.
ஒளிப்பதிவு & இயக்கம் – தினேஷ் பாபு
எடிட்டர் – அபிலாஷ் பாலசந்திரன்
இசை – ஹரி பிரசாத்
சொந்த உண்மை கதை மற்றும் தயாரிப்பு – பி.என். பலராம்
பிஆர்ஓ – விஜய்முரளி மற்றும் சக்தி சரவணன்

Leave a Reply

Your email address will not be published.