Naga chaitanya, Pooja Hegde Starning Laila O Laila Tamil Movie Stills.
நாகசைதன்யா நடிக்கும் “ லைலா ஓ லைலா “
தென்னிந்திய மொழி திரைப்பட சகாப்தத்தில் நாகேஸ்வரராவ் குடும்பம் அசைக்க முடியாத ஒரு அம்சம். வசூல் ராஜாவாக திகழும் நாகார்ஜுனாவின் அண்ணபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்க “ ஒக்க லைலா கோசம் “ என்ற தெலுங்கு படம் தெலுங்கில் வெளியாகி அமோக வெற்றிபெற்றது.
அந்த படமே தமிழில் “ லைலா ஓ லைலா “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாயகனாக நாகசைதன்யா நடிக்க, நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றும் பிரபு, சுமன், ஷாயாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி,ஆசிஷ்வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – I.ஆண்ட்ரு
இசை – அனூப் ரூபென்ஸ்
வசனம் – ஷாஜி
எடிட்டிங் – பிரவீன்
நடனம் – சேகர்
எழுதி இயக்கி இருப்பவர் – கே.விஜயகுமார்.
தயாரிப்பு – அக்கினேனி நாகார்ஜுனா.
இந்த படத்தை வெளியிடும் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி கூறியதாவது.. நாகார்ஜுன் என்றாலே தெலுங்கில் வசூல் ராஜா என்ற பெயர் உண்டு. அந்தளவுக்கு வெற்றி ஹீரோவாக கருதப் படுபவர். அவர் தயாரிக்க நாகசைதன்யா நடித்த இந்த “ லைலா ஓ லைலா “ படம் ஜாலியான காதல் கதையாக உருவாகி உள்ளது. பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெண்ணை காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், நாகசைதையாவிற்கும் திருமண ஏற்பாடு செய்யப் படுகிறது. . ஆனால் நாகசைதன்யா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். விருப் பப்பட்ட பெண்ணே கிடைக்கும் போது நாகசைதன்யா மறுக்க என்ன காரணம்? அதுதான் படத்தின் சுவாரஸ்யம். விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் A.N.பாலாஜி
Leave a Reply