ஹீரோ சினிமாஸ் – சி.மணிகண்டன் ஸ்ரீநாத் இயக்கத்தில் மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத், யோகி பாபு, வி.டி.வி கணேஷ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லெக் பீஸ்’  

சென்னையில் மணிகண்டன் சவுரி முடியை விலைக்கு வாங்கும் வேலை பார்த்து வருகிறார். கருணாகரன் கிளி வைத்து ஜோசியம் பார்ப்பவர் , ரமேஷ் திலக் பிரபல  நடிகர்கள் குரலில் பேசும் திறமை கொண்டவர் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை  நடத்தி வருகிறார் ஸ்ரீநாத் பேய்களை விரட்டும் வேலை பார்த்து வருகிறார்.

ஒருநாள் சாலையில் கிடைக்கும் 2000 ரூபாய் நோட்டு ஒன்றின் மூலம் நண்பர்களாகும் மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேரும்  மது பானக கடைக்கு செல்கிறார்கள்.

இதனையடுத்து அந்த  2000 ரூபாய் நோட்டின் மூலம் இவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை  வருகிறது.  இறுதியில்  2000 ரூபாய் நோட்டின் மூலம்  வந்த பிரச்சனை என்ன? அந்த பிரச்னையில் இருந்து மீண்டு வந்தார்களா? இல்லையா? என்பதே   ‘லெக் பீஸ்’  படத்தின் மீதிக்கதை.

குயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மணிகண்டன் இதுவரை நாயகனாக நடித்தவர் இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். கிளி ஜோதிடராக நடித்திருக்கும் கருணாகரன், பேய் விரட்டுபவராக நடித்திருக்கும் ஸ்ரீநாத், பலகுரல் கலைஞராக நடித்திருக்கும் ரமேஷ் திலக்  ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்து அனைவரின் பாராட்டை பெறுகிறார்கள்.

மேலாளராக வரும் யோகி பாபு, வழக்கமான  பாணியில் சிரிக்க வைக்கிறார். விடிவி கணேஷ், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும்  கதைக்கு  ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.மாசாணியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளது

கிரைம் , காமெடி, திரில்லர் ஆகியவற்றை மைய கருவாக வைத்து திரைப்படத்தை  சமூகத்தில்  பெண்களுக்கு  எவ்வாறு பாலியல் துன்புறுத்தல் இழைப்படுகிறது  என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில்  ‘லெக் பீஸ்’  தரமான படம்

மதிப்பீடு : 3.25/5

நடிகர்கள் : மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத், யோகி பாபு,
இசை : பிஜோர்ன் சுர்ரா
இயக்கம் : ஸ்ரீநாத்
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S 2 Media)

Leave a Reply

Your email address will not be published.