மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா, ராசி நட்சத்திரா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’.
பாரதிராஜா தேனியில் உள்ள கிராமத்தில் ஒரு விவசாயியாக, எழுத்தாளராக வாழ்க்கை ஓட்டி வருகிறார். அவரது ஒரே மகன் லண்டனுக்கு படிக்க சென்றவன் அங்கேயே குடியுரிமை பெற்று வாழத் தொடங்குகிறான்.அங்கேயே ஒரு பெண்ணை கல்யாணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிடுகிறான்.
ஒரு கட்டத்தில் லண்டனில் இருந்து தேனி கிராமம் வந்த தன் மகன் அழைத்தான் என்ற காரணத்துக்காக லண்டன் சென்றவர் அங்கு நேர்ந்த ஒரு சூழலால் அநாதை ஆக்கப்பட்டு ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்க்கப்படுகிறார். அங்கு உடனிருந்து மறைந்த ஒருவரின் கடைசி கால ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறார். அப்போது தன் அக்கா கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயலும் நட்சத்திராவைக் காப்பாற்றுகிறார் பாரதிராஜா. பத்து நாள் தன்னுடன் பயணிக்கும்படியும், அதற்குள் இந்த வாழ்க்கை போரடித்தால் தானே, நட்சத்திராவைக் கொல்வதாகச் சொல்கிறார் பாரதிராஜா.
அதற்குச் சம்மதித்து அவருடன் பயணத்தில் நட்சத்திராவும் உடன் செல்கிறார். பயணத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை நட்சத்திராவுக்குப் புரிய வைக்கிறார். இதனிடைய நட்சத்திராவை கடத்தியதாக பாரதிராஜா, அவரது அக்கா கணவர் போலீசிடம் புகார் அளிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை
பாரதிராஜா தனக்கான கச்சிதமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் அனுபவ நடிப்பை காட்டி இருக்கிறார். அவர் பேசும் சில வசனங்கள் அழுத்தமானதாக இருக்கின்றன.
ராசி நட்சத்திரா தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். பாரதிராஜாவிடம் அவர் குறும்பு செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. மவுனிகா, ஜோ.மல்லூரி இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்
சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு லண்டன் அழகை அப்படியே அள்ளிவது தருகிறது. பின்னணி இசை நன்றாக இருக்கிறது
நடிகர்கள் பாரதி ராஜா, ராசி நட்சத்திரா
இசை ரகுநந்தன்முருகன்
இயக்குனர் பாரதி ராஜா
மக்கள் தொடர்பு நிகில் முருகன்
Leave a Reply