https://www.youtube.com/watch?v=KTWsGOeTWyA

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் – ஸ்வேதா திரிபாதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் `மெஹந்தி சர்க்கஸ்’

1990களில் நடந்த ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கும் இத்திரைப்படம் இச்சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளின் வலிகளையும் வேதனைகளையும் விவரிக்கிறது.

கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் ராஜகீதம் மியூசிக்கல் என்ற பெயரில் பாடல் ஒலிப்பதிவு கடை ஒன்றை நடத்தி வரும் ஹீரோ ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்) இளையராஜாவின் பாடல்கள் மூலம் இளைஞர்களிடம் காதலை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வரும் வடமாநில குழுவில் உள்ள ஹீரோயின் மெஹந்தி (ஸ்வேதா திரிபாதி). மீது ரங்கராஜுக்கு காதல் ஏற்படுகிறது. ஊரார் காதலை இளையராஜாவின் பாட்டு மூலம் வளர்த்தவர், தன் காதலை சும்மா விட்டுவிடுவாரா, இந்தி பாடல் கேட்ட ஸ்வேதா திருபாதியை இளையராஜாவின் பாடல் மூலமாகவே, தனது காதல் வலையில் சிக்க வைத்துவிடுகிறார்.

ஹீரோ ஜீவாவின் அப்பாவுக்கும், ஹீரோயின் மெஹந்தியின் அப்பாவுக்கும் இந்த ஜோடியின் காதல் பிடிக்கவில்லை. அதிலும் கீழ் ஜாதி பெண்ணை காதலிப்பது குற்றம் என்பது போல ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் ஹீரோ அப்பா. அதே சமயம் ஹீரோயினின் அப்பா தன் மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? என்று ஒரு கடினமான சவாலை ஹீரோவிடம் சொல்கிறார். அந்த கடினமான சவாலை ஹீரோ ஏற்றாரா ? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்துகிறார். காதலை வெளிபடுத்தும் போதும், கத்தி வீசும்போதும், சாதிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் போதும் மாற்றிக்கொள்ளும் போதும் ரசிக்க வைக்கிறார்.

மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் நாயகி ‘மெஹந்தி’யாக நடித்திருக்கும் நடிகை ஸ்வேதா திருப்பதிதான். வட இந்திய முகமும், அழகிய உருண்டை கண்களுமாக.. பார்த்தவுடனேயே கவர்ந்திழுக்கும் தோற்றத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.

கிருஸ்தவ மதப்போதகராக வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெறுகிறார் வேல.ராமமூர்த்தி. கதாநாயகனின் நண்பனாக வரும் ஆர்.ஜே.விக்னேஷ் தேவையான இடங்களை நிரப்பி இருக்கிறார்கள்.

இந்த படத்தின் இன்னொரு உயிராக படத்தை கவிதையாக்கி இருக்கிறது இளையராஜாவின் பாடல்கள், 90களில் வாழ்ந்த காதலர்களிடையே அவருடைய பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்த படம் பதிவு செய்திருப்பது எதார்த்தத்தை வெளிப்படுத்தியது.

ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தேவையான இடங்களில் பின்னணிஇசையை ரசிக்க வைக்கும் அளவிற்கு கொடுத்திருக்கிறார். இயக்குநர் ராஜு முருகனின் உடன் பிறந்த அண்ணனும், அவரிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான சரவண ராஜேந்திரன், இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

இளையராஜாவின் பாடல்களுக்கும், காதலுக்கும் எந்த அளவுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை, அவரது சில பாடல்களோடும், அழகியலான காட்சிகளோடும் இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

நடிகர்கள் : மாதம் பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ்
இயக்குனர் : சரவணன் ராஜேந்திரன்
தயாரிப்பாளர் : ஞானவே ராஜா
பாடல்கள் : ஷான் ரோல்டன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published.